ஜி.கே.வாசனுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு- 5 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தாமக! – 5 constituencies allotted to g.k. vasan tmc to contest in all 5 seats on the lotus symbol

அதிமுக கூட்டணியில் தமாகாவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

GK Vasan TMC 5 seats(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுக்கு (த.மா.கா.) 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தொகுதிகளில் த.மா.கா. வேட்பாளர்கள் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

இழுபறியும் எதிர்பார்ப்பும்

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது, த.மா.கா. தரப்பில் இரட்டை இலக்கத் தொகுதிகள் (10-க்கும் மேல்) கோரப்பட்டன. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை ஜி.கே.வாசன் முன்னிறுத்தினார். ஆனால், பாஜக (27), பாமக (18) மற்றும் அமமுக (11) ஆகிய கட்சிகளுக்கு ஏற்கனவே அதிக இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், த.மா.கா-விற்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதில் பெரும் இழுபறி நீடித்தது.

ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள்
  1. கும்பகோணம்
  2. ஒட்டன்சத்திரம்
  3. ஈரோடு மேற்கு
  4. கிள்ளியூர்
  5. ராணிப்பேட்டை

கூட்டணியின் பிற முக்கிய கட்சிகளுக்கான இடங்கள்

பாஜக: 27 தொகுதிகள்
பாமக: 18 தொகுதிகள்
அமமுக: 11 தொகுதிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது