தமிழ்நாட்டில் 32 தாமரை வேட்பாளர்கள்– 2026 தேர்தலில் தமிழக சட்டமன்றத்தில் தாமரை மலருமா? – 32 lotus candidates in tamil nadu will the lotus bloom in the tamil nadu assembly in the 2026 elections

அதிமுக கூட்டணியில் பாஜக (27) மற்றும் தமாகா (5) இணைந்து மொத்தம் 32 தொகுதிகளில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவது, தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Lotus Symbol TN Election(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) பாஜகவின் தாமரை சின்னம் 32 தொகுதிகளில் களம் காண்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தை (2025 – 2026)

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தாமரை சின்னத்தை அதிக இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆரம்பத்தில் பாஜக தனித்து 60 முதல் 80 இடங்களைக் கோரியது. ஆனால், கூட்டணியில் பாமக, தமாகா, அமமுக போன்ற கட்சிகள் இருந்ததால், இடங்களைப் பகிர்ந்தளிப்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த கவனத்துடன் செயல்பட்டார்.

பாஜகவின் 27 இடங்கள்

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பாஜகவிற்கு நேரடியாக 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கடந்த 2021 தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜகவிற்கு, இம்முறை கூடுதல் தொகுதிகள் வழங்கப்பட்டது அக்கட்சியின் வளர்ச்சிக்கான அங்கீகாரமாகக் கருதப்பட்டது.

காரசார விவாதம்! சிக்கலில் அட்மட்;அடித்து ஆடும் bjp

ஜி.கே.வாசனின் தாமரை அதிரடி

இந்தக் கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சிக்கு 5 தொகுதிகள் (கும்பகோணம், ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், ராணிப்பேட்டை) ஒதுக்கப்பட்டன. இங்குதான் ஒரு முக்கிய அரசியல் திருப்பம் ஏற்பட்டது. தனது சைக்கிள் சின்னத்திற்குப் பதிலாக, இந்த 5 இடங்களிலும் தமாகா வேட்பாளர்கள் பாஜகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என ஜி.கே.வாசன் அறிவித்தார். இதன் மூலம் பாஜகவின் 27 + தமாகாவின் 5 எனத் தாமரை சின்னத்தின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது.

இதன் பின்னணியில் உள்ள கணக்கு

தாமரை சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் பாஜகவின் அடிப்படை வாக்குகளைத் தமாகா வேட்பாளர்கள் எளிதாகப் பெற முடியும். எப்படியாவது சட்டமன்றத்திற்குள் தாமரைச் சின்னத்தில் 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு வர வேண்டும் என்பது டெல்லி தலைமையின் கட்டளை. அதற்கு இந்த 32 தொகுதிகள் ஒரு வலுவான அஸ்திவாரமாகப் பார்க்கப்படுகிறது.
ஒரே சின்னத்தின் கீழ் (தாமரை) அதிக வேட்பாளர்கள் நிற்பது, திமுக மற்றும் விஜய்யின் தவெக போன்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும். கடந்த முறை 4 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருந்த பாஜக, இம்முறை எப்படியாவது 15 முதல் 20 இடங்களை வென்று தமிழகச் சட்டமன்றத்தில் ஒரு பலமான எதிர்க்கட்சியாக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையே தமாகாவிடம் இருந்து பாஜக சின்னத்திற்குப் பெற்றுள்ளது.

மண்டல வாரியான பிரிப்பு

இந்த 32 தொகுதிகளில் பெரும்பகுதி கொங்கு மண்டலம் (மேற்கு) மற்றும் தென் மாவட்டங்களில் குவிந்துள்ளன. குறிப்பாகக் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தாமரைச் சின்னத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

வாக்கு சதவீதம்

32 இடங்களில் தாமரைச் சின்னம் போட்டியிடுவதால், பாஜகவின் ஒட்டுமொத்த மாநில வாக்கு சதவீதம் கணிசமாக உயரும். இது வரும் காலங்களில் தமிழகத்தில் பாஜகவை ஒரு பிரதான கட்சியாக நிலைநிறுத்த உதவும். கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் தனிச் சின்னத்தில் நின்றால் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாக பாஜக மேலிடம் கருதியது. இதனால்தான் தமாகா (5 தொகுதிகள்) மற்றும் தமமுக வை தாமரை சின்னத்தில் போட்டியிட அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.