கல்யாணம் எப்போது? நடிகை சாய் பல்லவி கொடுத்த பதில்

‘பிரேமம்’ என்ற மலையாள திரைப்படத்தின் மலர் டீச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் ‘சீதாராம்’ படத்தில் தற்போது சாய் பல்லவி நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பிஸியாக உள்ள அவர், அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய காணொளி வைரலாகி வருகிறது.

Also Read
‘காந்தாரா’ சர்ச்சை: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராகும் ரன்வீர் சிங்
கல்யாணம் எப்போது? நடிகை சாய் பல்லவி கொடுத்த பதில்

அப்போது சாய் பல்லவியிடம் “திருமணம் எப்போது?” என்று கேட்கப்பட்ட நிலையில், அதற்கு “இப்போதைக்கு இல்லை… கண்டிப்பாக இப்போதைக்கு இல்லை” என்று பதிலளித்தார். மேலும், தற்போது தாம் தனியாகவே இருப்பதாகவும் சாய் பல்லவி தெரிவித்தார்.

Also Read
சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு
கல்யாணம் எப்போது? நடிகை சாய் பல்லவி கொடுத்த பதில்

Source link