வடதமிழகத்தில் ஒரு திடீர் திருப்பம்– 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என வேல்முருகன் அறிவிப்பு – sudden twist in north tamil nadu velmurugan announces he will not contest in the 2026 assembly elections

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், வேல்முருகனின் அறிவிப்பு ஒன்று அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Velmurugan TVK not contesting 2026(புகைப்படங்கள்Samayam Tamil)
திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) இந்தத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என்று அதன் தலைவர் டி. வேல்முருகன் அறிவித்துள்ளார். இந்த அதிரடி முடிவு வடதமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி

கடந்த சில வாரங்களாகவே திமுக – தவாக இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்தது. கடந்த 2021 தேர்தலில் திமுகவின் உதயசூரியன்சின்னத்தில் போட்டியிட்டு வென்ற வேல்முருகன், இந்த முறை தனது கட்சிக்குக் குறைந்தது 2 முதல் 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், அவை தவாக-வின் பம்பரம் சின்னத்தில் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் பிடிவாதமாக இருந்தார்.