புதுடெல்லி,
ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பை சர்வதேச பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் உள்ள ஹார் சென்ஸ் நகரில் ஏப்ரல் 24-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
தாமஸ் மற்றும் உபேர் கோப்பை போட்டிக்கான இந்திய பேட்மிண்டன அணிகள் அறிவிக்கப்பட்டன.
ஆண்கள் அணி: லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி, ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிர னாய், கிரண் ஜார்ஜ். சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி, ஹரிக ரன் அம்சகருணன், எம்.ஆர்.அர்ஜூன், துருவ் கபிலா.
பெண்கள் அணி: பி.வி.சிந்து, உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா, தேவிகா சிஹாக், இஷாராணி பாரூவா, திரிஷா ஜாலி, காயத்ரி கோபிசந்த், கவிபி ரியா செல்வம், சிம்ரன் சிங், தனிஷா கிரஸ்டோ.
