தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி..நீஷம் கூறியது என்ன ?

சென்னை,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து அணி 2 போட்டிகளிலும் , தென் ஆப்பிரிக்கா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5வது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் கானர் எஸ்டர்ஹூய்ஸ் 75 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-2 என வென்றது.

தோல்வி தொடர்பாக பேசிய நியூசிலாந்து கேப்டன் ஜிம்மி நீஷம் கூறியதாவது,

கடினமான தொடக்கமாக இருந்தது. பின்னர், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆட்டங்களில் கடுமையாகப் போராடி 2-1 என முன்னிலை பெற்றோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தொடரின் இறுதிப்போட்டியில் சுமாராக விளையாடியதால் தோல்வியடைந்தோம். அது ஏமாற்றமளிக்கிறது. வருடத்தின் எல்லா நேரங்களிலும் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. எனவே, சில வீரர்கள் இல்லாத நிலையில், சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. மேலும், நாங்கள் சில அனுபவங்களைப் பெற்றோம், சில கடினமான முடிவுகள், சில நல்ல தருணங்களைக் கண்டோம் என்று நினைக்கிறேன். மேலும், இந்தத் தொடருக்கு வந்த இளம் வீரர்கள் அனைவரும் தங்களை மேம்படுத்திக் கொள்ள சில அனுபவங்களைக் கற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.என தெரிவித்தார்.

Source link