ராஜஸ்தான் அணி விற்பனை…உயிரிழந்த வார்னேவுக்கு அடித்த ரூ.460 கோடி ஜாக்பாட்..பின்னணி என்ன ?

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான ராஜஸ் தான் ராயல்ஸ் அணி 2008-ம் ஆண்டு ஷேன் வார்னே தலைமையில் அறிமுக சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது.

2022-ம் ஆண்டில் 2-வது இடத்தை பிடித்தது. இடையில் சூதாட்ட சர்ச்சை யில் சிக்கி இரண்டு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டது. இந்த சீசனில் ரியான் பராக் தலைமையில் களம் காணுகிறது.

இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விற்பதற்கு அந்த அணி உரிமையாளர்கள் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டனர். அந்த அணியை வாங்க டைம்ஸ் இண்டர்நெட், ஆதித்யா பிர்லா குழுமம், மிட் டல் தலைமையிலான நிறுவனங்கள் முயற்சித்தன.இந்த நிலையில் அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் கல் சோமானி தலைமையிலான குழுமம் ரூ.15,290 கோடிக்கு ராஜஸ்தான் அணியை வாங்கியது.

இந்த நிலையில், ஷேன் வார்னேவின் புத்திசாலிதனம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மொத்தம் 4 வருடம் அந்த ராஜஸ்தான் அணியில் வார்னே விளையாடினார். அதற்காக மொத்தமாக அவர் 9 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார். ஆனால் சம்பளம் இல்லாமல் ஒவ்வொரு வருடமும் அணியின் பங்குகளில் 0.75% பங்கு அவருக்கு கொடுக்கவேண்டும் என்று நிர்வாகத்திடம் அவர் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

அதனை ஏற்ற ராஜஸ்தான் அணி உரிமையாளர்கள், ஒவ்வொரு ஆண்டும் 0.75% பங்குகளை அவருக்கு கொடுத்து வந்தனர். இதனால் 4 சீசன்கள் ஆடிய ஷேன் வார்னே 3 சதவீத ராஜஸ்தான் ராயல்ஸ் பங்குகளை வைத்திருந்தார். தற்போது ராஜஸ்தான் அணி ரூ.15,290 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சூழலில், ஷேன் வார்னேவின் பங்காக ரூ.460 கோடி அவரின் குடும்பத்தினருக்கு செல்லவுள்ளது. ஷேன் வார்னே 2022ஆம் ஆண்டிலேயே உயிரிழந்தார் என்பது குறிபிடத்தக்கது.

Source link