டிரம்ப், மேக்ரானை பின்னுக்கு தள்ளி… உலகின் புகழ் பெற்ற தலைவராக பிரதமர் மோடி தேர்வு; அமெரிக்க ஆய்வில் தகவல்

புதுடெல்லி

அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு செயல்படும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் ஒன்று உலகளவில் புகழ் பெற்ற தலைவர்கள் பற்றி சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், அதிக பிரபலம் வாய்ந்த உலகளாவிய ஜனநாயக தலைவராக பிரதமர் மோடி மீண்டும் உருவாகியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

இதன்படி, அவர் 68 சதவீத ஆதரவை பெற்று முதல் இடத்தில் உள்ளார். சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கய் பார்மலின் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் இருவரும் தலா 62 சதவீதத்துடன் 2-வது இடம் பிடித்துள்ளனர்.

Also Read
எங்களுடைய மனவுறுதியை சோதித்து பார்க்காதீர்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை
டிரம்ப், மேக்ரானை பின்னுக்கு தள்ளி... உலகின் புகழ் பெற்ற தலைவராக பிரதமர் மோடி தேர்வு; அமெரிக்க ஆய்வில் தகவல்

ஒவ்வொரு நாட்டிலுள்ள வயதுக்கு வந்தவர்களிடம் மார்ச் 2 முதல் 8 வரையிலான 7 நாட்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் கிடைத்த சராசரியான பார்வைகளின் அடிப்படையில் இந்த விகிதங்கள் கணக்கிடப்பட்டு உள்ளன.

தொடர்ச்சியாக பிரதமர் மோடிக்கு, உள்நாட்டில் கிடைத்து வரும் பிரபலம் மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் அங்கீகாரம் ஆகியவை பிற பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்களை விட அவர் முன்னுக்கு வந்துள்ள விசயங்களாக குறிப்பிடப்படுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 39 சதவீத ஆதரவையும், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் 24 சதவீத ஆதரவையும் பெற்றிருக்கின்றனர். தர வரிசையின்படி, குறைந்த ஆதரவை பெற்ற தலைவர்களில் ஒருவராக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் (17 சதவீத ஆதரவு) உள்ளார். அவருக்கான எதிர்ப்பு விகிதம் 75 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

Source link