“அந்த திறன் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை” – ஓ. பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்

தேனி,

தேனி மாவட்டம் போடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமி இதுவரை தெரிவித்த கருத்துகள் நம்பகத்தன்மை அற்றவை. 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடர்ச்சியாக பல தோல்விகளை சந்தித்துள்ளார். அவர் ஆளுமை மிக்க தலைவர் அல்ல என்று குற்றம்சாட்டினார்.

Also Read
விடுபட்ட நபர்களுக்கு இறுதி வாய்ப்பு; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்
“அந்த திறன் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை” - ஓ. பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்

அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவது, “டெல்லி சொல்வதைதான் இபிஎஸ் கேட்கிறார்” என்பதற்கான சான்று எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசியலில் ஒரு வலுவான தலைவர் என்றால் தோல்விக்குப் பிறகு கட்சியை மீண்டும் எழுப்பி வெற்றி பெற வேண்டும். ஆனால் அந்த திறன் இபிஎஸிடம் இல்லை எனவும் அவர் விமர்சித்தார்.

இபிஎஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யானது என்றும், அதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

Source link