14 அமைச்சர்களின் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய அதிமுக.. எடப்பாடியின் வியூகம் என்ன? – aiadmk has allocated seats to alliance parties considered important out of 234 seats in tamil nadu

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் முக்கிய தொகுதிகளாக கருதப்படும் தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

Edappadi Palaniswami
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25 ஆம் தேதி) வெளியிட்டார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கிய தொகுதிகள்

ஏற்கனவே அறிவித்த படி, பாஜக – 27, பாமக – 18, அமமுக – 11, தமாகா – 5, ஐஜேகே -2 உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் முக்கிய தொகுதிகளை, தன்னுடைய கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி உள்ளார்.

விஜய் போட்டியிடும் தொகுதி பாமகவுக்கு

அதாவது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிட விரும்பும் தொகுதியான பெரம்பூர் தொகுதியை, அதிமுக கூட்டணியில் போட்டியிட பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதே போல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் தொகுதியான காரைக்குடி தொகுதியில், அதிமுக கூட்டணியில் போட்டியிட அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

அதிமுகவின் கோட்டை பாஜகவுக்கு

மேலும் சபாநாயகர் அப்பாவுவின் தொகுதியான ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட, அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுகவின் கோட்டை என்று கருதப்படும் சபாநாயகராக இருந்த தனபாலுவின் தொகுதியான அவிநாசி (தனி) தொகுதியை, தற்போது மாற்றி பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி உள்ளார்.

14 அமைச்சர்களின் தொகுதிகள்

இதுபோக 14 திமுக அமைச்சர்களின் சொந்த தொகுதிகளையும், அதிமுக நேரடியாக போட்டியிடாமல் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி இருக்கிறார்.
அதில் அமைச்சர் மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி, அமைச்சர் எ.வ. வேலுவின் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி, அமைச்சர் நாசரின் ஆவடி சட்டமன்றத் தொகுதி, அமைச்சர் பெரியகருப்பனின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, அமைச்சர் மதிவேந்தனின் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி ஆகிய தொகுதிகளை அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.

அமுமகவுக்கான தொகுதிகள்

மேலும் அமைச்சர் கே.என். நேருவின் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி, அமைச்சர் மா. சுப்பிரமணியனின் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் இருக்கும் அமமுக போட்டியிட உள்ளன.

அன்புமணி அதிமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார், ராமதாஸ் சிக்னல் என்ன_ கூட்டணி யாருடன்_

அதே போல அமைச்சர் சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, அமைச்சர் முத்துசாமியின் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் அமைச்சர் காந்தியின் ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி ஆகிய தொகுதிகள் அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.

எடப்பாடியின் வியூகம் என்ன?

தேர்தல் நெருங்கும் வேளையில் இப்படி முக்கிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கி விட்டு, மீதமுள்ள 169 தொகுதிகளில் அதிமுக களம் காண இருக்கிறது. ஆனால் இந்த தொகுதிப் பட்டியல் அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த வியூகம் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.