தெஹ்ரான்,
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இரு தரப்புக்குமான போர் 25 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருப்பதாகவும், எனவே 5 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்தார். ஆனால், அமெரிக்காவுடன் எத்தகைய பேச்சுவார்த்தையிலும் தாங்கள் ஈடபடவில்லை என ஈரான் திட்டவட்டமாகக் கூறியது.
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச திட்டத்தையும் அமெரிக்கா நிராகரித்துள்ளது. போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில் ,அமெரிக்காவுக்கு சொந்தமான எப் 18 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வீடியோவையும் ஈரான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. எனினும், விமானம் எங்கு வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டது, அதில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? விமானியின் கதி என்ன? என்பது தொடர்பான எந்த தகவலையும் ஈரான் வெளியிடவில்லை. அதே நேரத்தில் , அமெரிக்கா இந்த தகவலை உடனடியாக நிராகரித்துள்ளது.
