மீண்டும் தள்ளிப்போகும் 'எல்.ஐ.கே' பட ரிலீஸ்.. ரசிகர்களுக்கு தொடரும் ஏமாற்றம்

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது ‘டியூட்’ பட வெளியீடு காரணமாக ‘எல்.ஐ.கே’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அதன்பிறகு பலமுறை வெளியீடு தள்ளிப்போனதால், படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

Also Read
“ரசியுங்கள்.. கொண்டாடுங்கள்..” ஆனால் விமர்சனம் செய்யாதீர்கள்- நடிகை திஷா பதானி
மீண்டும் தள்ளிப்போகும் 'எல்.ஐ.கே' பட ரிலீஸ்.. ரசிகர்களுக்கு தொடரும் ஏமாற்றம்

இந்நிலையில், ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது, ஏப்ரல் 3ஆம் தேதி இப்படம் வெளியாகாது என்பது தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தற்போது, ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் படத்தை வெளியிட படக்குழு முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read
சீரியல் நடிகையிடம் நகை மோசடி.. கண்கலங்கி வீடியோ வெளியிட்ட தாமரை
மீண்டும் தள்ளிப்போகும் 'எல்.ஐ.கே' பட ரிலீஸ்.. ரசிகர்களுக்கு தொடரும் ஏமாற்றம்

Source link