ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி: டிரம்ப் உறுதி

வாஷிங்டன்,

மேற்காசிய பகுதியில் அமைந்த ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக ஏவுகணைகளை கொண்டு, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது. ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வர தீவிரம் காட்டும் அமெ ரிக்கா, அதற்காக 15 அம்ச திட்டம் ஒன்றை வகுத்து இருக்கிறது. இந்த திட்டத்தை பாகிஸ்தான் மற்றும் எகிப்தை சேர்ந்த அதிகாரிகள் ஈரானிடம் ஒப்படைத்து உள்ளனர்.

அதில் முக்கியமாக ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை நீக்கம், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை கைவிடுதல், ஏவுகணைகள் மீதான கட்டுப் பாடுகள் மற்றும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல், ஆயுதக்கு ழுக்களுக்கு ஈரான் வழங்கி வரும் ஆதரவை நிறுத்துதல் போன்றவை இடம்பெற்று உள்ளன. இவற்றில் பல அம்சங்கள் போருக்கு முந்தைய பேச்சுவார்த்தைகளில் இடம்பெறவில்லை.

அமெரிக்காவின் இந்த 15 அம்ச திட்டத்தை ஈரான் இன்னும் ஏற்க மறுத்துள்ளது. இந்த அமைதி திட்டத்தில் உள்ள பல நிபந்தனைகளை ஈரான் ஏற்காது. ஏனெனில் ஈரான் தனது நீண்டதூர ஏவுகணைத் திட்டம் குறித்தோ அல் லது தனது பாதுகாப்புக்கு முக்கியமாகக் கருதும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கான தனது ஆதரவு குறித்தோ விவாதிக்கப்போவதில்லை என்று அறிவித்து இருந்தது.

இதைப்போல ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவதை தனது மிகப்பெரிய மூலோபாய நன்மைகளில் ஒன்றாக கருதுகிறது. எனவே அதையும் விட்டுக்கொடுக்குமா? என்பதிலும் கேள்விக் குறியே நீடிக்கிறது. மேலும் ஈரான்-அமெரிக்கா அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிமுறைகளை மத்தியஸ்தர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கு ஆசியப் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், “கடந்த 47 ஆண்டுகளாக எந்த அமெரிக்க அதிபரும் செய்யத் துணியாததை நாங்கள் செய்து முடித்துள்ளோம் என்றும் ஈரானின் அணு ஆயுத மிரட்டலை ‘புற்றுநோய்’ எனக் குறிப்பிட்ட அவர், உலகப் பாதுகாப்பிற்காக அந்தப் புற்றுநோயை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டதாகக் கூறினார். மேலும் தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் தற்போது தொடங்கியுள்ள இப்பணியை முழுமையாக முடித்து ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகவும்” டிரம்ப் உறுதிபட தெரிவித்தார்.

மேலும் போர் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானின் மின் கட்டமைப்புகளை தாக்காமல், 3 நாட்களாக அமெரிக்கா ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. ஆனால், தற்போதைய சூழலின் எதார்த்தத்தை ஏற்கத் தவறினால், இதுவரை இல்லாத மிகக் கடுமையாகத் தாக்குதலுக்கு ஈரான் உள்ளாக நேரிடும். அதிபர் டிரம்ப் வெறும் மிரட்டல் விடுப்பவர் மட்டுமல்ல” என தெரிவித்தது.

Source link