பாஜகவிற்கு வேளச்சேரி தொகுதி இல்லை… எஸ்.ஜி.சூர்யா பதில்- திமுகவின் நேரடி போட்டி காரணமா? – sg suryah disappointment velachery plan with bjp constituencies in 2026 assembly election

என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 27 சட்டமன்றத் தொகுதிகளில் வேளச்சேரி இடம்பெறவில்லை. இது எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட பலருக்கும் பெரிதும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

SG Surya BJP Velachery Constituency Contest Missing(புகைப்படங்கள்Samayam Tamil)
வேளச்சேரியின் முகமாக மாறும் அளவிற்கு எஸ்.ஜி.சூர்யாவின் பணிகள் கடந்த சில ஆண்டுகளில் பெரிதும் கவனம் ஈர்த்தன. BJP Velachery என்ற பெயரில் சமூக வலைதளப் பக்கங்களை உருவாக்கி, அதன்மூலம் தொகுதி சார்ந்த பிரச்சினைகள் குறித்து தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார். அதுமட்டுமின்றி வேளச்சேரியில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்வது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது எனத் தீவிரம் காட்டினார். இதன் பின்னணியில் எப்படியாவது சீட் வாங்கி தேர்தலில் நின்றுவிட வேண்டும் என்ற அரசியல் கணக்குகள் இருந்தன.

வேளச்சேரி லிஸ்டில் இல்லை

கட்சி தலைமையிடமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வேளச்சேரி தொகுதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தொகுதி பங்கீடு பட்டியலில், பாஜகவிற்கு வேளச்சேரி ஒதுக்கப்படவில்லை. இது எஸ்.ஜி.சூர்யாவிற்கு ஏமாற்றம் அளித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். வேளச்சேரி மட்டுமல்ல. அனைத்து தொகுதிகளிலும் இளைஞரணி சார்பாக மிகக் கடுமையாக பணியாற்ற இருக்கிறோம்.

தலைநகரில் தாராளம் காட்டும் எடப்பாடி…இது தான் வியூகமா?

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை

தேர்தலில் நிச்சயம் வெற்றியும் பெறுவோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றார். வேறு தொகுதிகளில் ஏதேனும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளீர்களா? என்ற கேள்விக்கு, அதை கட்சி தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். பிரதமர் மோடி அடுத்ததாக எப்போது தமிழகம் வருவார் என்று கேட்டதற்கு, இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை. ஏற்கனவே மதுராந்தகம், மதுரை, திருச்சி என மூன்று முறை தேர்தல் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். காங்கிரஸ் கூட்டணியை எடுத்துக் கொண்டால் யாரும் வரவில்லை.

எஸ்.ஜி.சூர்யா அளித்த பதில்

பிரதமர் அதிக முறை வருவார். வெற்றியும் பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். சென்னையில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அதிகப்படியான தொகுதிகள் ஒதுக்கப்பட்ட மாவட்டங்களும் இருக்கின்றன. எது சரி என்பதை நன்றாக யோசித்து கட்சி தலைமை முடிவெடுத்திருக்கும் என்றார். வேளச்சேரியில் திமுக நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதிமுகவே எடுத்துக் கொண்டதா? என்று கேட்டதற்கு, யூகம் தான். அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பும் வரவில்லை.

நிச்சயமாக வேளச்சேரி தொகுதியில் கடினமான உழைத்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம் என்று கூறினார். வேளச்சேரி தொகுதி இதுவரை 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. 2021ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அசன் மௌலானா 4,352 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் எம்.கே.அசோக்கை தோற்கடித்தார். இம்முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா மீது பல்வேறு அதிருப்திகள் தொகுதியில் நிலவுகின்றன.

வேளச்சேரியில் திமுக போட்டி

எனவே திமுக நேரடியாக களம் காண முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நிச்சயம் கடினமான போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சார்பில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், மகளிரணி நிர்வாகி யாழினி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன. அதிமுக தரப்பில் மீண்டும் அசோக்கிற்கு வாய்ப்பு வழங்க அதிக வாய்ப்பிருக்கிறது.