லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு – டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இருந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று லண்டன் நோக்கி புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டு, டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. தற்போது அது விரிவான தொழில்நுட்ப சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, அவற்றை நிறைவு செய்வதற்கு கூடுதல் நேரம் தேவைப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்றும், அவர்கள் டெல்லிக்கு செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ‘ஏர் இந்தியா’ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Source link