தனக்கு மட்டும் பதவி.. கட்சிக்காக உழைத்தவர்களை விட்டுவிட்டார் கமல்ஹாசன் – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

சென்னை,

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கட்சி ஆரம்பித்து அதன் பின் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் மக்கள் நீதி மையத்திற்கு பொதுமக்கள் வாக்களித்தார்கள். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தங்களது பணத்தை செலவு செய்து அவருக்காக உழைத்தனர். ஆனால் கமலஹாசன் தன்னுடைய சுயநலத்திற்காக தான் மட்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகி விட்டு அவரை நம்பி அவருடைய கட்சியில் உள்ளவர்களை அம்போ என விட்டுவிட்டார்.

இந்த நேரத்தில் நான் கோவை தெற்கு தொகுதியில் உள்ள மக்களுக்கு நன்றி சொல்கிறேன். ஏனென்றால் மிக சரியான பதிலை கமலஹாசனுக்கு கொடுத்துள்ளார்கள். தனது கட்சிக்கு கூட விசுவாசமாக இல்லாமல், கட்சியில் உள்ள தொண்டர்களை காப்பாற்ற முடியாத ஒருவர் எப்படி ஒரு கட்சியை ஆரம்பித்து வீணாக போனது என்பதற்கு மக்கள் நீதி மய்யமே சாட்சி ஆகும். புதிதாக கட்சி ஆரம்பிக்கும் எல்லாருக்கும் இவர் நமக்காக வேலை செய்வாரா, நம்முடைய குரலாக தொடர்ச்சியாக பயணிப்பாரா, தனது கொள்கை அரசியல் என்று வரும்போது அதை சமரசம் செய்யாமல் இருப்பாரா என்று பார்ப்பதற்கு கமலஹாசனும் அவருடைய கட்சியும் சிறந்த உதாரணம். யார் எப்படி என்று இந்த கட்சியை பார்த்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளர்.

Source link