சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக குறைந்துவந்த தங்கம், தற்போது உயர தொடங்கி உள்ளது நகைப்பிரியர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.
இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரனுக்கு தங்கம் ரூ.1.09,360 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,670-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் மாலையில் தங்கத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.2,560 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.320 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ரூ.260 விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் உயர்ந்த தங்கம் விலை, மாலையில் கடும் சரிவை சந்தித்து இருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

