பா.ஜ.க. இஸ்ரேலில் அரசு அமைக்க வேண்டும்; ஹிமந்த பிஸ்வாவுக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி

அசாமில் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. மே 20-ந்தேதியுடன் அசாம் மாநில பதவி காலம் முடிவடையும் நிலையில், 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநில சட்டசபைக்கு, ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்ட தேர்தலாக நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அசாமில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பா.ஜ.க. தேர்தல் பணியாற்றி வருகிறது. எனினும், பா.ஜ.க.வை வீழ்த்தி இந்த தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியும் திட்டம் தீட்டி வருகிறது.

Also Read
ராகுல் காந்தியும், காங்கிரசும் பா.ஜ.க.வின் ‘பி டீம்’: பினராயி விஜயன் பேச்சு
பா.ஜ.க. இஸ்ரேலில் அரசு அமைக்க வேண்டும்; ஹிமந்த பிஸ்வாவுக்கு காங்கிரஸ் பதிலடி

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரமோத் திவாரி இன்று பேசும்போது அசாமில் முதல்-மந்திரியை கடுமையாக சாடினார். அவர் பேசும்போது, ஒரு முதல்-மந்திரியாக நீங்கள் சிறிதளவேனும் படித்திருக்க வேண்டும். கொஞ்சமேனும் அறிவு வேண்டும். ஜனநாயகத்தில் இந்தியாவின் எல்லைக்குள்ளேயே ஆட்சியமைக்க முடியும்.

பாகிஸ்தானில் காங்கிரஸ் அரசு அமைக்க வேண்டும் என நீங்கள் வற்புறுத்தினால், உங்களுடைய அரசை இஸ்ரேலில் நீங்கள் அமைக்க வேண்டும். அதுவே உங்களுடைய தந்தை பூமி. உங்களுடைய பிரதமர் இதற்கு முன் அப்படிதான் கூறினார் என்றார். உங்களுக்கான பதில் உங்களுடைய சொந்த மொழியிலேயே தரப்படும் என்று நினைவில் கொள்ளுங்கள். உங்களுடைய தந்தை பூமியை மறவாதீர்கள் என்றும் கூறினார்.

அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா பேசும்போது, உள்ளூர் மக்கள் யாரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். அந்த எதிர்க்கட்சி, இந்தியாவில் அல்ல.. பாகிஸ்தானிலோ அல்லது வங்காளதேசத்திலோ அரசமைக்க கூடும் என்று கூறினார்.

Source link