Tamilisai Soundararajan Reply To Sekar Babu,எங்களை பற்றி பேசும் உரிமை சேகர் பாபுவிற்கு இல்லை..தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி – bjp tamilisai soundararajan reply to sekar babu criticisms

சேகர் பாபு தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்தார். குறிப்பாக தமிழிசை மற்றும் ஜி.கே வாசனை வாரிசு அரசியல் என்றார் சேகர் பாபு. இதற்கு பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்

முக்கிய அம்சங்கள்:

சேகர் பாபு விமர்சனம்

தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி

tamilisai soundararajan reply
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீடு நிறைவடைந்தது. நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று முதல் தனது பரப்புரையையும் துவங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. முதன் முதலாக மைலாப்பூர் தொகுதியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி பரப்புரையை துவங்கினார்.மைலாப்பூர் தொகுதி இம்முறை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகின்றது. மேலும் நேற்று எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரையில் தமிழிசையும் கலந்துகொண்டார். இதன் மூலம் தமிழிசை மைலாப்பூரில் தான் நிற்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியானது.
இந்நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். கூட்டணிக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது, தொகுதிப்பங்கீடு சரியில்லை, தோழமை கட்சிகளை திமுக விழுங்கி வருகின்றது என அடுக்கடுக்காக விமர்சித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி தரும் வகையில் அமைச்சர் சேகர் பாபு பேசினார்
ஏற்கனவே முதலமைச்சர் முக ஸ்டாலின் வேட்பாளர்களை உறுதி செய்துவிட்டார். 234 தொகுதிகளிலும் முக ஸ்டாலின் தான் நிற்பதாக அவரே கூறிவிட்டார். இதெல்லாம் தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டு இருக்கின்றார் என கூறினார் சேகர் பாபு. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பவர்கள் திமுகவை குடும்ப அரசியல் என விமர்சித்து வருகின்றனர். ஆனால் தமிழிசை, ஜி.கே வாசன் போன்றவர்கள் தான் வாரிசு அரசியல் செய்கின்றனர் என சேகர் பாபு கூறியிருக்கின்றார்.
அதற்கு பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன், நான் அப்பா வளர்ந்த பெண், இருந்தாலும் பிரதமர் மோடியை பிடிக்கும் என்பதால் அவரின் கட்சியில் சேர்ந்தேன். ஆனால் அம்மா வளர்த்த சேகர் பாபு தற்போது அப்பா கிட்ட போய் அடிமையாகி இருக்கின்றார். எனவே சேகர் பாபுவிற்கு எங்களை பற்றி பேசும் தார்மீக உரிமை இல்லை. அம்மா ஜெயலலிதா அவர்களால் வளர்க்கப்பட்ட சேகர் பாபு இன்று முக ஸ்டாலினிடம் போய் அடிமையாகி இருக்கின்றார்.
அதனால் என் அப்பாவை பற்றியெல்லாம் அவர் பேசக்கூடாது. ஆனால் நான் அப்பா வளர்த்த பெண்ணாக இருந்தாலும் அவருடைய கட்சியில் இல்லை. வாரிசு அரசியலை எந்த விதத்திலும் பயன்படுத்தி கொள்ளவில்லை. பாஜகவில் நான் இணைந்து 27 வருடங்களாகிவிட்டது. அடிப்படை உறுப்பினராக பாஜகவில் என் பயணத்தை துவங்கினேன். இன்று படிப்படியாக உயர்ந்து இந்த நிலையை அடைந்துள்ளேன். எனவே எங்களை பற்றியெல்லாம் அவர் பேசக்கூடாது என்றார் தமிழிசை.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்தார். ஒருகாலத்தில் பாஜகவை எதிர்த்த ஜெயலலிதாவின் கட்சி இன்று அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கின்றனர். டெல்லி சொல்வதை தான் கேட்கின்றனர் என்பது போல பேசினார் சிவசங்கர். இதற்கும் பதில் கொடுத்த தமிழிசை, டெல்லிக்கு போனால் இவருக்கு என்ன பிரச்சனை. எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு போனால் இவர்களுக்கு என்ன பிரச்சனை.
எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு டிக்கெட் போட்டாலே திமுகவினர் பயப்படுகின்றனர். டெல்லி இந்தியாவின் தலைநகர் தானே, இந்தியாவில் தானே டெல்லி இருக்கு. பிறகு இவர்களுக்கு டெல்லிக்கு சென்றால் என்ன பிரச்சனை. ஏன் டெல்லிக்கு சென்றால் திமுகவினர் பயப்படுகின்றனர். திமுகவின் அமைச்சர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றாலே பயப்படுகின்றனர். உங்களுடைய அமைச்சர்கள் பெரும்பாலும் வாரிசுகள் தானே, மேலும் உங்களுடைய சில அமைச்சர்கள் போட்டியிட முடியாத நிலை உள்ளது.
அதிமுகவினர் அமித் ஷா மற்றும் மோடியிடம் இருந்து தகவல் வாங்கிக்கொண்டு வருகின்றனர் என திமுகவினர் சொல்கிறார்களே, அப்போ கனிமொழி எதற்காக டெல்லி சென்றார்கள். நாங்கள் கூட்டணி கட்சி தலைவரிடலிடம் ஆலோசித்து பேசுகின்றோம். ஆனால் நீங்கள் கூட்டணி கட்சி தலைவர்களை மதிக்கின்றீர்களா ? திருமாவளவன் அவர்களுக்கு மிகவும் குறைவான தொகுதிகளை கொடுக்கின்றீர்கள்.
பாஜகவை காரணம் காட்டி அதிகமான தொகுதிகளை நீங்கள் கூட்டணி கட்சிகளிடம் இருந்து எடுத்துகொள்கின்றீர்கள். கூட்டணி கட்சிகளின் சீட்டை குறைப்பதற்கு பாஜக உதவியாக இருக்கின்றது என பேசினார் தமிழிசை சௌந்தரராஜன். இவ்வாறு அதிமுகவினர் திமுக கூட்டணியில் நடைபெற்று வரும் இழுபறிகளை குறிவைத்து விமர்சனம் செய்து வருகின்றனர். இன்று கூட மதிமுக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

செங்கோட்டையன் பற்றி பேச நேரம் கிடையாது- அதிமுக சிவசங்கரி பேட்டி

எங்களுக்கு குறைவான தொகுதிகள் கொடுத்துள்ளனர், தனி சின்னமும் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர் மதிமுகவினர். இதையும் அதிமுகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். மறுபக்கம் எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவிடம் கேட்டுக்கொண்டு தான் தொகுதிகளை பிரித்துள்ளார் என திமுகவினர் விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.