பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெங்களூரு கோனனகுண்டே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பாப்பண்ணா. இவருக்கும் பெண் தாதாவுமான யசஷ்வினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. யசஷ்வினி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா மீது போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம் யசஷ்வினி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அதில், இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா எனக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை கொடுக்கிறார். செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுகிறார். அத்துடன் இதுபற்றியெல்லாம் வெளியே சொன்னால் கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவதாகவும் இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா மிரட்டுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்த புகாருடன் வாட்ஸ்-அப்பில் இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா அனுப்பிய ஆபாச குறுந்தகவல்கள், புகைப்படங்கள், செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீஸ் கமிஷனரிடம் யசஷ்வினி வழங்கி இருக்கிறார். இன்ஸ்பெக்டர் அனுப்பிய ஆபாச குறுந்தகவல்கள், யசஷ்வினியுடன் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்பெக்டர் பேசும்போது யசஷ்வினியை. யஷ் நீ என் தங்கம், பேபி..இரவு நேரத்தில் எனக்கு இருக்கும் டென்ஷனை குறைக்க வா பேபி..நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என செல்லமாக பேசுவது இடம் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் தன் பெயரை பாப்பண்ணா என்பதை சுருக்கி பாப்பு என்று அழைக்க வேண்டும் என்று யசஷ்வினியிடம் கூறுவது. அதற்கு ஒரு இன்ஸ்பெக்டரை பாப்பு என்ற எப்படி சொல்வேன் என யசஷ்வினி கேட்க, அவ்வாறு இன்ஸ்பெக்டர் என்று சொன்னால் வீட்டுக்கு வந்து உதைப்பேன் என பாப்பண்ணா கூறுவதும் இடம் பெற்றிருக்கிறது. மேலும் யசஷ்வினியிடம் ஆபாசமாக பேசிய பாப்பண்ணா கெஞ்சியபடி ஆசையாக ஒரு முத்தம் கொடுக்கும்படி கேட்பதும் இடம் பெற்றுள்ளது.
இதனையடுத்து போலீஸ் கமிஷனர் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா மீது துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெற்கு பிரிவு காவல் துணை கமிஷன் அனிதா ஹட்டன்னாவுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
பெண் தாதா யசஷ்வினி கவுடா நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த 2017-ம் ஆண்டு பசவனகுடி போலீஸ் நிலையத்தில் என் மீது ரவுடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.அப்போது பாப்பண்ணா காவல் நிலைய அதிகாரியாக இருந்தார். அவர் அப்போதெ எனது செல்போன் எண்ணை பெற்றிருந்தார். அன்று முதல் அவர் தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பி வருகிறார். ஒரு காவல்துறை அதிகாரியை போல ஒருபோதும் இன்ஸ்பெக்டர் நடந்துகொண்டதில்லை. நான் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தா என் பிள்களைக்கு தீங்கு நேரிடும் என்று எச்சரித்தார்.
இருப்பினும் நான் துணை ஆணையரிடம் புகார் அளித்தேன். அதன் புறகு பாப்பண்ணா என்னை மிரட்டினார். இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக அந்த அதிகாரி இதற்கு முன்பு 2 முறை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனக்கே இந்த நிலைமை என்றால் மற்ற பெண்களின் நிலை என்னவாகும் என்றார்.
லேடி தாதா என்று பெயர் பெற்ற யஷ்ஸ்வினி கவுடாவுக்கு இன்ஸ்பெக்டர் தொடர்ச்சியாக அனுப்பியதாக கூறப்படும் ஆபாச ஆடியோ கிளுகிளுப்புகள் மற்றும் வாட்ஸ்சப் சாட்டிங் கர்நாடக காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
