Vanathi Srinivasan About Sarathkumar,தேர்தலுக்கு பிறகு சரத்குமாருக்கு பதவி..வானதி சீனிவாசன் உறுதி – sarathkumar will get posting after election says vanathi srinivasan

சரத்குமார் பாஜக மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பாஜகவில் எந்த பொறுப்பும் வழங்கவில்லை என கூறிய சரத்குமாருக்கு வானதி சீனிவாசன் பதில் கொடுத்திருக்கின்றார். தேர்தலுக்கு பிறகு சரத்குமாருக்கு பதவி கிடைக்கும் என்றார் வானதி சீனிவாசன்

முக்கிய அம்சங்கள்:

தேர்தலுக்கு பிறகு சரத்குமாருக்கு பதவி

vanathi srinivasan about sarathkumar
சமீபத்தில் சரத்குமார் பாஜகவில் தனக்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் சரத்குமார். பாஜகவில் எந்த ஒரு பொறுப்பும் அங்கீகாரமும் தனக்கு கிடைக்காததால் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவெடுக்க ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக சரத்குமார் கூறினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் சில ஆதரவாளர்கள், பாஜகவிடம் இருந்து விலகி மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை துவங்குமாறு கூறியதாகவும் சரத்குமார் தெரிவித்தார்.ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், பாஜகவில் எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படவில்லை. பொறுப்பு இருந்தால் தானே பணியாற்ற முடியும். ஒரு உறுப்பினராக மட்டுமே எப்படி செயல்பட முடியும். பாஜக தனக்கு பொறுப்பு வழங்காமல் இருப்பதால் மனவேதனையில் இருப்பதாக பேசினார் சரத்குமார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு சரத்குமார்தன் கட்சியை பாஜகவுடன் இணைத்துக்கொண்டார். அதனைத்தொடர்ந்து தேசிய அளவில் சரத்குமாருக்கு பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் அவருக்கு கட்சியில் எந்த ஒரு பொறுப்போ பதவியோ வழங்கப்படவிலை. இதனால் மனவேதனை அடைந்த சரத்குமார் இரண்டு ஆண்டுகள் காத்திருந்து தற்போது தேர்தல் நேரத்தில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தும் பேசினார். இந்நிலையில் சரத்குமாருக்கு பதவி வழங்குவது குறித்து வானதி சீனிவாசன் தன் கருத்தை கூறியிருக்கின்றார். தற்சமயம் தேர்தல் நேரம் என்பதால் இந்த சமயத்தில் யாருக்கும் தேசிய அளவில் பதவி கொடுக்க முடியாது. தமிழ்நாடு உட்பட புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் என ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகின்றது.
இந்த நேரத்தில் தேர்தல் வேலைகளில் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். எனவே தற்போதைய சூழலில் தேசிய அளவில் பதவி கொடுக்க இயலாது. சரத்குமார் சிறப்பு வாய்ந்த தலைவர். அவருக்கு மிகப்பெரிய அளவில் அரசியலில் எதிர்காலம் உள்ளது. கண்டிப்பாக தேர்தல் முடிந்த பிறகு தேசிய அளவில் அவருக்கு பதவி வழங்கப்படும் என உறுதியாக கூறினார் வானதி சீனிவாசன்.
இதன் மூலம் சரத்குமாருக்குபாஜகவில் தேர்தலுக்கு பிறகு தேசிய அளவில் கட்சி பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே சமயம் தற்போதைக்கு சரத்குமாருக்கு பதவி கொடுக்கப்படமாட்டாது என்றும் தெரிகின்றது. இதனைத்தொடர்ந்து தேர்தல் முடியும் வரை அவர் காத்திருப்பாரா ? அல்லது வேறேதேனும் முடிவை எடுப்பாரா ? என தெரியவில்லை.
ஏனென்றால் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் சரத்குமார் காத்துகொண்டு இருந்தார். ஆனால் அவருக்கு இரண்டு ஆண்டுகளில் எந்த ஒரு பதவியும் பொறுப்பும் வழங்கவில்லை. தற்போது தேர்தல் முடிந்து அவருக்கு பதவி கொடுக்கப்படும் என கூறப்பட்டு வருகின்றது. எனவே இரண்டு ஆண்டுகள் காத்திருந்த சரத்குமார் இரண்டு மாதங்கள் காத்திருப்பாரா ? அல்லது வேறு ஒரு கூட்டணியிலோ ? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியையோ துவங்குவாரா ? என்பது தெரியவில்லை.

விஜய் கட்சியோடு கூட்டணி? விஜயபிரபாகரன் பேட்டி…!

ஆனால் தற்போதைய நிலவரப்படி பார்த்தால் சரத்குமார் பாஜகவில் தான் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் கூட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசினார் சரத்குமார். அந்த சந்திப்பில் நயினார் நாகேந்திரன் உங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியதாக தெரிவித்தார் சரத்குமார். அதனால் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் சரத்குமார் தெரிவித்தார். இதன் மூலம் அவர் தேர்தல் முடியும் வரை காத்திருப்பார் என்பது போல தான் தெரிகின்றது.