சென்னை ,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. 28-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் இந்த முறை சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் யார் யார் என கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த ருதுராஜ், இந்த சீசனில் நானும் , சஞ்சு சாம்சனும் இணைந்து தொடக்க வீரராகக் களம் இறங்குவோம் என தெரிவித்துள்ளார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
