அபுதாபியில் குறையாத போர் பதற்றம்.. மேலும் ஒரு இந்தியர் பலி

அபுதாபி,

அபுதாபியில் ஏவுகணை வெடித்து பாகங்கள் சிதறியதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். அபுதாபியின் ஸ்வைஹான் தெருவில் இன்று வான் பாதுகாப்பு படையினரால் ஏவுகணை இடைமறிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது விழுந்த ஏவுகணை சிதறல்களால், இந்தியர் உள்பட இருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்தனர். மேலும் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்கள் சேதமடைந்திருக்கின்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read
பிரான்சில் 3 நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு
அபுதாபியில் குறையாத போர் பதற்றம்.. மேலும் ஒரு இந்தியர் பலி

ஏவுகணை எந்த இடத்திலிருந்து ஏவப்பட்டது, அதன் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link