பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு: விடைத்தாள் திருத்தும் பணி 8-ந்தேதி தொடக்கம்

திருச்சி,

தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகள் கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. திருச்சி மாவட்டத்தில் 134 மையங்களில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் எழுதினர். அனைத்து பாட பிரிவுகளுக்கான தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ- மாணவிகள் உற்சாகத்தில் திளைத்தனர். அவர்கள் துள்ளிக்குதித்தும், வினாத்தாளை மேலே தூக்கி வீசியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் தேர்வு நிறைவடைந்ததால், மாணவிகள் தங்களது தோழிகளுக்கும், மாணவர்கள் தங்களது நண்பர்களுக்கும் பிரியாவிடை கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வருகிற மே மாதம் 8-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link