மியாமி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சபலென்கா

மியாமி,

மியாமி ஓபன் டென்னி: ஆண்கள் பிரிவு

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 31-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரர் ஆர்துர்பில்ஸ், 23-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமிபாலை எதிர் கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் டைபிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை ஆர்துர் பில்ஸ் போராடி இழந்தார். அதன் பிறகு மனம் தளராமல் செயல்பட்ட ஆர்துர் சரிவில் இருந்து மீண்டு வந்து டைபிரேக்கர் வரை சென்ற அடுத்த 2 செட்களையும் வென்று அசத்தினார்

கடைசி செட்டில் டைபிரேக்கரில் ஆர்துர் பில்ஸ் 2-6 என்ற கணக்கில் பின் தங்கி இருந்ததால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடிய டாமி பால் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேட்ச் பாயிண்டில் இருந்து ஆர்துல் பில்ஸ் தன்னை தற்காத்து கொண்டதுடன் தொடச்சியாக 6 புள்ளிகள் எடுத்து வெற்றியை சொந்தமாக்கினார்.

முடிவில் ஆர்துல் பில்ஸ் 6-7 (3-7), 7-6 (7-4), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் டாலி பாலை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 47 நிமிடம் நீடித்தது. 1,000 தரவரிசை புள்ளிகள் கொண்ட மாஸ்டர்ஸ் போட்டியில் ஆர்துர் பில்ஸ் அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல்முறை யாகும்.

மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா 7-6 (7-1), 7-5 என்ற நேர்செட்டில் மார்ட்டின் லண்டலூஸ்சை (ஸ்பெயின்) வெளியேற்றினார்.

பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 5-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) வீழ்த்தி 3-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.

‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஹெய்லி பாப் டிஸ்ட்டை (அமெரிக்கா)வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து அரைஇறுதியில் சபலென்கா, எலினா ரைபகினாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இன்று நடந்த பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் சபலென்கா, எலினா ரைபகினாவை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, மியாமி ஓபன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் கோகோ காபை எதிர்கொள்ள தகுதி பெற்றார்.

Source link