முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,

சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் கூட் டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. மீதமுள்ள 164 இடங்களில் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. வேட்பாளர் கள் பட்டியலையும், கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ள தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும் ஒரிரு தினங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து வெளியிட இருக்கிறார்.

இப்பணிகளை முடித்த பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவாரூரில் இருந்து ஏப்ரல் 2-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. திருவாரூரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கி, தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2-ம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே அதாவது (31-ம் தேதி) செவ்வாய்க்கிழமை திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்க உள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உள்ளிட்ட 7 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளார்.

Source link