மதிமுகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியானது

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.

அதன்படி திமுக – 164, காங்கிரஸ் – 28, தே.மு.தி.க. – 10, விடுதலை சிறுத்தைகள் கட்சி -8, இந்திய கம்யூனிஸ்டு கட்சி – 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி – 5, ம.தி.மு.க. – 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 2, மனிதநேய ஜனநாயக கட்சி – 1, எஸ்.டி.பி.ஐ. -1, முக்குலத்தோர் புலிப்படை – 1, தமிழர் தேசம் கட்சி – 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வ அறிவிக்க உள்ளார். அதே போன்று ம.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என்று வைகோவும் அறிவித்து இருந்தார்.

அதன்படி, மதிமுகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் மதிமுகவுக்கு மதுரை மேற்கு தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தேச வேட்பாளர் பட்டியல்:-

மதுரை தெற்கு – பூமிநாதன்

மொடக்குறிச்சி – செந்தில்நாதன்

சீர்காழி – செந்தில் செல்வன்

கடையநல்லூர் – தி.மு.ராஜேந்திரன்

Source link