பிஎஸ்எல் தொடரில் சிவப்பு நிறமாக மாறிய பந்து- காரணம் என்ன ?

லாகூர்,

8 அணிகள் இடையிலான 11-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) டி20 கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் ஐதராபாத் கிங்ஸ்மேன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் லாகூர் கலாண்டர்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டிகளுக்கு இடையே வெள்ளை நிறப் பந்து திடீரென சிவப்பு நிறமாக மாறியது வீரர்களையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஐதராபாத் கிங்ஸ்மேன் அணியின் புதிய சீருடை மற்றும் பேட்களில் பயன்படுத்தப்பட்ட மெரூன் நிறச் சாயம், பந்தில் ஒட்டிக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஆட்டத்தின் 15-வது ஓவரில் பந்து பேட்ஸ்மேன்களுக்குத் சரியாகத் தெரியாத அளவுக்கு நிறம் மாறியதால், நடுவர்கள் வேறு வழியின்றி புதிய பந்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Source link