திமுக ஆதரவாளரான பொன்ராஜ் பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. அவரின் பேச்சை எதிர்த்து தவெக தலைவர் விஜய் டிஜிபி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தார். இதுகுறித்து தமிழிசை தன் கருத்தினை கூறியிருக்கின்றார்
முக்கிய அம்சங்கள்:
பொன்ராஜ் சர்ச்சை
தமிழிசை கண்டனம்
இதனைத்தொடர்ந்து பொன்ராஜ்தனது சர்ச்சை பேச்சிற்காக மன்னிப்பும் கேட்டு இருக்கின்றார். நான் எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு கூறவில்லை. காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்புகேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார் பொன்ராஜ். ஆனாலும் சாதாரணமாக மன்னிப்பு கேட்டால் போதுமா, அவர் மீது திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் பலர் சொல்கின்றனர். மேலும் பிற கட்சி தலைவர்களும் பொன்ராஜ் பேச்சிற்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
அந்த வகையில் பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜனும் தன் கண்டனங்களை பொன்ராஜிற்கு தெரிவித்தார். அவர் பேசியது, பொன்ராஜ் பேசியதற்காக தவெக தலைவர் விஜய் நேரடியாகவே சென்று டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கின்றார். பொன்ராஜ் பேசியது மிகவும் தவறானது. அரசின் பாதுகாப்பில் இவர் இருக்கின்றார். அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருந்தால் இப்படியெல்லாம் பேசலாமா ? முதலமைச்சர் முக ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவருக்கு எனது மிகப்பெரிய கண்டனங்கள்.குறிப்பாக ஒரு கட்சி தலைவரே நேரடியாக சென்று புகார் கொடுக்கும் அளவிற்கு ஒருவர் பேசியிருக்கிறார் என்றால் அது எந்தளவிற்கு தவறான விஷயமாக இருக்கும். அப்படிப்பட்ட பேச்சை பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறும் மன்னிப்பு மட்டும் கேட்டால் போதாது, இவர்களை எல்லாம் கட்சியை விட்டே நீக்க வேண்டும். திமுகபொன்ராஜின் பேச்சிற்கு அவரை மன்னிப்பு கேட்க வைத்து கட்சியை விட்டே நீக்க வேண்டும் என காட்டமாக பேசினார் தமிழிசை சௌந்தரராஜன்.
இந்நிலையில் பொன்ராஜ் பேசியது சமூகத்தளங்களில் பெரும் கண்டனத்திற்கு உண்டானது.அனைவரும் அவரை விமர்சித்து வசைபாடி வந்தார்கள். ஆனால் தன் கட்சியை சேர்ந்த பெண்களை இப்படி இழிவாக பேசியதை தொடர்ந்து விஜய் அறிக்கைவிட்டதோடு மட்டும் நிறுத்தாமல் நேரடியாக டிஜிபி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தார். அவர் நேரடியாக சென்று புகார் கொடுத்ததன் காரணமாக அக்கட்சியை சேர்ந்த பெண்கள் ஆறுதலடைந்தனர்.
தமக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் கண்டிப்பாக கட்சி தலைவர் துணைநிற்பார் என்ற நம்பிக்கை அவர்களிடம் அதிகரித்திருப்பதாகவே தெரிகின்றது. தவெக கட்சியை சேர்ந்த பெண்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பெண்களின் மத்தியிலும் தவெக விஜய் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கும் என்றே தெரிகின்றது.
பாஜக நிர்வாகி செய்த மோசடி: வீரலட்சுமி பரபரப்பு பேட்டி
என்னதான் தவெக தலைவர் விஜய் குறித்து சில சர்ச்சைகள் உலா வந்துகொண்டு இருந்தாலும் தன் கட்சி பெண்களை இழிவாக பேசிய ஒருவர் மீது நேரடியாக சென்று புகார் கொடுத்து,நான் பெண்களுக்கு துணை நிற்பேன் என்பதை நிரூபித்து இருக்கின்றார் விஜய். அதனைத்தொடர்ந்து பொன்ராஜ் சோசியல் மீடியா பக்கத்தில் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் பேசியதற்கு மன்னிப்பு மட்டும் போதாது, திமுக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
