Admk Constituency Change Plan,கந்தர்வகோட்டை பதிலாக ஆலங்குடி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க அதிமுக திட்டமிடுவதாக தகவல் – edappadi palanisamy planning to gave alangudi constituency to bjp

அதிமுக இன்று தங்களது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு முடிவடைந்தது. புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி மட்டும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியை விட்டு வெளியேறினார். மற்றபடி அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடைந்துவிட்டது. பாஜக கேட்டதை போல அவர்களுக்கு அதிமுக கடந்த முறையை விட அதிகமான தொகுதிகளை தான் வழங்கியிருக்கின்றனர்.
பாஜகவிற்கு 27 தொகுதிகளை அதிமுக வழங்கியிருக்கின்றனர். அவர்களும் வேட்பாளர்களை அறிவிக்க தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் அதிமுக மற்றும் பாஜக இடையே ஒரு தொகுதியை மாற்றிக்கொள்ள இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதாவது பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட கந்தர்வகோட்டை தொகுதிக்கு பதிலாக ஆலங்குடி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க அதிமுக யோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
தற்போது வரை அதிமுக150 வேட்பாளர்களை இரண்டு கட்டமாக அறிவித்து இருக்கின்றனர். அதில் அவர்கள் ஆலங்குடி தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. ஒருவேளை முன்றாம் கட்டத்தில் அதிமுக அறிவிப்பார்களா ? என்பது தெரியவில்லை. இதற்கிடையில் ஆலங்குடி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கிவிட்டு கந்தர்வகோட்டை தொகுதியை அதிமுக எடுத்துள்ள பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருப்பதாக தெரிகின்றது.
தற்போது எடப்பாடி பழனிச்சாமிமற்றும் நைனார் நாகேந்திரன் இடையே இந்த பேச்சுவார்த்தை போய்க்கொண்டு வருவதாக செய்திகள் வருகின்றன. ஆனால் இது உறுதியான தகவலா ? என்பது தெரியவில்லை. இருப்பினும் இன்று மாலைக்குள் அதிமுகவின் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்தபடி வெளியாகவில்லை. ஒருவேளை இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எட்டப்பட்ட பிறகு தான் அதிமுக தங்களது கடைசிகட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவார்களா ? என்ற கருத்துக்களும் போய்க்கொண்டு இருக்கின்றன. இதுவரை 150 தொகுதிகளின் வேட்பாளர்களை வெளியிட்ட அதிமுக இன்னும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வெளியிட வேண்டும்.

அதில் ஆலங்குடி தொகுதியும் இடம்பெற்றுள்ளது. இதைத்தவிர மேலும் ஒரு சில தொகுதிகள் குறித்தும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகின்றது. ஒருவேளை இந்த தொகுதி மாற்றும் பேச்சுவார்த்தை உண்மையென்றால் இதற்கு பாஜக விருப்பம் தெரிவிப்பார்களா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தொகுதி மாற்றும் யோசனையில் அதிமுக எதற்காக இறங்கியிருக்கின்றனர் என்பதும் கேள்விக்குறியாக தான் உள்ளது.

இதுபோன்ற பலதரப்பட்ட கேள்விகள் உலா வந்துகொண்டு இருக்கும் நிலையில் இதற்கெல்லாம் அதிமுகவின் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் விடை சொல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிமுக இறுதிப்பட்டியலில் ஆலங்குடி தொகுதி பாஜகவிற்கா ? அல்லது அதிமுகவிற்கா ? என்பது தெரிய வரும். அநேகமாக நாளைக்குள் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிடுவார்கள் என கணிக்கப்படுகின்றது.

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்…யார் இந்த தனபால்?

இதற்கிடையில் எடப்பாடி பழனிச்சாமி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை எல்லாம் முடித்துவிட்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த சில தினங்களாக தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சென்னை ஆலந்தூர் பகுதியில் பிரச்சாரம் செய்து வருகின்றார். மறுபக்கம் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் வேலைகளும் போய்க்கொண்டு இருக்கின்றது. இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Source link