அறிவாலயத்தில் இரவில் திடீர் விசிட்.. விசிக கேட்ட தொகுதிகள் கிடைத்ததா? திருமா பளீச் பதில்! – thirumavalavan says dmk-vck pact for 8 constituencies signed

விசிகவுக்கு ஒதுக்கட்ட 8 தொகுதிகளில் எந்தெந்த தொகுதி ஒதுக்கப்பட உள்ளது குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.

விசிகக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.இன்னும் தேர்தலுக்கு இன்னும் 26 நாட்களே உள்ளது.எப்போதும் இல்லாத அளவுக்கு திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்துள்ளது. கடந்த மாதத்தில் இருந்து திமுக தலைமை கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இதுவரை, திமுக கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை கூட்டணியில் உள்ள 18 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

  • காங்கிரஸுக்கு 28+1 தொகுதி
  • மதிமுகக்கு 4 தொகுதிகள்
  • இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 2 தொகுதிகள்
  • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள்
  • மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்

நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?

மொத்தம் 234 தொகுதிகளில் இதுவரை 43 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் சில தொகுதிகளில், குறிப்பாக மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவை திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விசிகவுக்கு 8 தொகுதிகள் வரை திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் எந்தெந்த தொகுதிகளில் விசிக ஒதுப்பட வாய்ப்புள்ளது குறித்து இன்று ஆலோசனை நடந்த சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்து தொல். திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கான எட்டு தொகுதிகளை அடையாளம் கண்டு இருக்கிறோம்.
பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் டி ஆர் பாலு அவர்களும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் நானும் ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளோம். தொகுதி கையெழுத்து ஆகிவிட்டது .முறைப்படி அதிகாரபூர்வமாக கூட்டணியின் தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்று கூறினார்.
விசிக கேட்ட தொகுதிகள் கிடைத்ததா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப? திருப்திகரமாக இருந்தது. சுமுகமான அளவில் பேச்சு வார்த்தை நடந்தது. விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளனர்.கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள் வழங்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு ? அது இன்னும் இரண்டு தினங்களில் தெரிந்துவிடும். இதனை அதிகாரப்பூர்வமாக முதல்வர் ஸ்டாலின் தான் அறிவிப்பார் என்று கூறினார்.
திமுக கூட்டணியில் இழுபறி இன்னும் நீடிக்கிறதா என்ற கேள்விக்கு? அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அனைத்தும் சுமுகமாக முடிந்துள்ளது.விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளிடப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதாக எதிர்க் கட்சிகள் குற்றம்ச்சாட்டி வருவது குறித்த கேள்விக்கு? கூட்டணியில் கடைசி நேரத்தில் ஏதேனும் பிரச்சனை எழாதா வெடிக்காதா என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்பவர்கள், மீண்டும் மீண்டும் ஏமாறப் போகிறார்கள்.
அப்படி, எந்த பிரச்சனையும் இல்லை. அதாவது அவர்கள் சொல்வதைப் போல இழுபறி ஏதும் இல்லை பத்துக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் ஒரு கூட்டணியில் இருக்கிறபோது, தனித்தனியே ஒவ்வொரு கட்சியையும் அழைத்து பேசுகிறபோது, ஒரு கட்சி கேட்கிற தொகுதிகளை இன்னொரு கட்சி கேட்கும் நிலை இருக்கிற போது, இந்த தாமதம் ஏற்படத்தான் செய்யும். ஆகவே இதை அவர்கள் எடுப்பது என்கிறார்கள் அப்படி எந்த இதுவரையும் இல்லை என்பது தான் எதார்த்தமான உண்மை . இன்று இரவே அல்லது நாளை காலை அனைத்து தொகுதிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் முதல்வர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மேலும் திமுக கூட்டணியில் அங்கிகாரம் இருக்ககூடிய கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி எழுப்பிய விமர்சனத்திற்கு? அது பற்றி எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் தான் கவலைப்பட வேண்டுமே தவிர நாங்கள் தோற்க வேண்டும் என்று கருதுகிறவர்கள் அல்லது வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை என்று கூறினார்.