பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு: டி.கே.சிவக்குமார் விமர்சனம்

பெங்களூரு,

மத்திய கிழக்கு நாடுகளில் போர் நடைபெற்று வருவதால் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லை.

இந்த நிலையில் பெட்ரோல்-டீசல் மீதான சுங்க வரி லிட்டருக்கு ரூ.10 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மத்திய அரசு நம்மை கொலை செய்கிறது. தேர்தல் நேரத்தில் சுங்க வரியை குறைத்துள்ளனர். தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு இந்த விலை குறைப்பை செய்துள்ளது. நயாரா நிறுவனம் ஏற்கனவே பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்திவிட்டது. இதுகுறித்து நாங்கள் மக்களிடம் கொண்டு செல்வோம். கர்நாடகத்தில் அவற்றின் மீதான வரியை குறைப்பது குறித்து பின்னர் பேசுகிறோம்.

Source link