புதுப்பொழிவு பெறும் பழைய குற்றாலம் அருவி.. விரைவில் குளிக்க அனுமதி

தென்காசி,

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சீசன் காலகட்டங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரண மாக பழைய குற்றால அருவி பகுதி மிகப்பெரிய சேதத்தை சந்தித்தது.

அங்கிருந்த தடுப்புகள், கழிவறைகள், தரைதளங்கள் மற்றும் பழைய குற்றால அருவி செல்லும் சாலைகள் முழுமையாக சீர்குலைந்த நிலையில், அதனை சரி செய்யும் முயற்சியில் வனத்துறையினர், சுற்றுலாத்துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து தீவிர மேம்பாட்டு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:-

பழைய குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் போது, தடுப்புகள் அடித்து செல்லாமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகள் செய் யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பழைய குற்றால அருவியில் ஆண்களும், பெண்களும் அருகருகே நின்று குளித்து வந்த நிலையில், தற்போது பழைய குற்றால அருவியின் நடுப்பகுதியில் சுவர் போன்ற ஒரு கட்டமைப்பு உருவாக்கப் பட்டு ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக குளிக்கும் வகையில் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.

பழைய குற்றால அருவி தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இன் னும் கழிவறை செப்டிக் டேங்க் வேலை மட்டுமே மீதமுள்ள நிலையில், மற்ற பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து சற்று குறைவாகவே காணப்பட்டு வருவதால், மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் சுற்றுலா பணிகள் குளிக்க உடனடியாக அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுமார் 133 நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ள பழைய குற்றால அருவியில் விரைவில் குளிக்க அனுமதிக்கப்பட உள்ளதால் சுற் றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Source link