தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் களம்
2026 தேர்தல் நடந் து முடிந்த தேர்தலை காட்டிலும், திமுக, அதிமுக நாதகவிற்கு முக்கியமானது. ஏன்னென்றால், தவெக விஜய் அரசியலில் பிரதான கட்சிகளாக இருக்கக்கூடிய திமுக, அதிமுக சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் இளைஞர், பெண்கள் வாக்குகளை சிதற செய்யும் என்று கூறப்படுகிறது. இதற்கு இடையே, பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் பரப்புரை நடத்த காவல்துறையினரிடம் கடந்த 26 ஆம் தேதி அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
பெரம்பூர் விஜய் பிரசாரம்
அந்த விண்ணப்பத்தில் விஜய் தனது பிரசாரத்தை பேசின் பாலம் பகுதியில் இருந்து தொடங்கி முல்லை நகர் சந்திப்பில் தெருமுனைப் பிரசாரம் நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அம்பேத்கர் கல்லூரி முதல் சர்மா நகர் வரை சாலை வழியாகப் பயணித்து இறுதியாக வில்லிவாக்கத்தில் பிரசாரம் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் விஜய் பிரசாரம் அனுமதி மறுப்பு
மேலும் முல்லை நகர் சந்திப்பில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 3,000 பேர் பங்கேற்பார்கள் என்றும் 20 ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட உள்ளதால் அதற்கான அனுமதி வழங்க வேண்டும் என்றும் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ளது.ஆனால் முல்லை நகர் சிறிய பகுதி என்பதால் பரப்புரை நடத்த ஏற்றது அல்ல என்று கூறிக் காவல்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது.மேலும் வேறு இடத்தை தேர்வு செய்ய காவல்துறை அனுமதி வலியுறுத்தி உள்ளது.
விஜய் வேட்புமனுத்தாக்கல் எப்போது?
இந்த சூழலில்,வரும் 29ஆம் தேதி 234 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இரண்டு கட்டங்களாக விஜய் அறிவிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து 30 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய செய்ய உள்ளார் பின்பு பரப்புரையை தொடங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே வேப்பமனுவில் குறிப்பிட வேண்டிய விவரங்கள் தொடர்பாக வழக்கறிஞர்களுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
