குவாலியரில் கோர விபத்து: ஆட்டோ மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

போபால்,

மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தாதிபூர் பகுதியை சேர்ந்த சுபம் ஷக்யா என்பவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை சுபம் ஷக்யா தனது குடும்பத்துடன் அருகில் உள்ள சீத்தலா மாதா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென அதிவேகமாக வந்த எஸ்யூவி கார் ஒன்று ஆட்டோ மீது கடுமையாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அதில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கு பிறகு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஒடியவரை போலீசார் கைது செய்தனர். அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Source link