பிரதமர் மோடி புதுச்சேரி வருகை.. ஏப்ரல் 3-ல் பிரம்மாண்ட பிரச்சாரம் – பாஜகவின் பலே பிளான்! – prime minister modi will visit puducherry on the 3rd to campaign nda alliance

பிரதமர் மோடி 3-ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். அப்போது என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியை ஆதரித்து பரப்புரை மேற்க்கொள்ள உள்ளார்.

pm modi puducherry visit(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் தேதியை கடந்த மார்ச் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரியின் பொருத்தவரையில் 30 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில், 294 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். மேலும் 23ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடைசி நாளான மார்ச் 27 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டது. இதில் 71 பேரின் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள்:

அகில இந்திய NR காங்கிரஸ்
பாரதிய ஜனதா கட்சி
இந்திய தேசிய காங்கிரஸ்
திராவிட முன்னேற்றக் கழகம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தமிழக வெற்றி கழகம்
நாம் தமிழர், தேமுதிக
உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்ல உடைக்கபோறது திமுகவோட கோட்டையை தான்- விஜய் போடும் மாஸ்டர் பிளான்

அந்த வகையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் தேசியஜனநாயக கூட்டணியும், திமுக – காங்கிரஸ் இண்டியா கூட்டணியும் தேர்தலை சந்திக்க உள்ளது.அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட இழுபறி மற்றும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 10 தொகுதிகளும், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சிக்கும் தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி பிரசாரம்

இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது.அந்த வகையில்,இந்த நிலையில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3-ம் தேதி வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரியில் பிரதமர் மோடியின் வருகை பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான நிலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்திலும் கூட்டணி உறுதியாக உள்ள நிலையில் பிரதமரின் பிரச்சாரம் இரு மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என பாஜக தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இரண்டாம் தேதி கேரளாவில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்கிடையே பிரதமரின் பயண அட்டவணையை பாஜகவினர் தமிழ்நாட்டில் சிறிய அளவிலான பிரச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

பாஜக அரசியல் வியூகம்

மேலும் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள் , அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை நிலவுவதால் பிரச்சாரத்தை தீவிர படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மறுப்புறம் பிரதமரின் வருகைக்கு முன்னதாகவே தமிழகத்தில் உள்ள திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்க வேண்டும் என்ற முனைப்புடன் திமுக தலைமை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.