இயந்திரக்கோளாறு காரணமாக டெல்லியில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

புதுடெல்லி,

விசாகப்பட்டினத்திலிருந்து டெல்லி நோக்கிச்சென்ற இண்டிகோ விமானத்தில் 160 பயணிகள் பயணம் செய்தனர். அப்போது விமானத்தில் திடிரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இண்டிகோ நிறுவனத்தின் விசாகப்பட்டினம்-டெல்லி வழித்தட விமானம் 6E 579-இன் ஒரு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலை 10.39 மணிக்கு ‘முழுமையான அவசரநிலை’ அறிவிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் 160 பயணிகள் பயணம் செய்ததாகவும் விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் இணையதளமான flightradar24.com-இன் தரவுகளின்படி, அந்த விமானம் காலை 10.59 மணிக்குத் தரையிறங்கியது என தகவல் வெளியாகி உள்ளது.

Source link