புதுடெல்லி,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் இன்று முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். –
இந்த நிலையில், குஜராத் அணி வீரர் கிளென் பிலிப்ஸ் இடது கை பேட்ஸ்மேனாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வலது கை பேட்ஸ்மேனான அவர் இடது கை பேட்ஸ்மேனாக பயிற்சியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
