Dmk Candidate List,லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம் என திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் – tamilnadu chief minister mk stalin announces dmk candidates for 164 constituencies

திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதலமைச்சர் முக ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 175 தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 59 தொகுதியில் கூட்டணி கட்சிகளின் சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கின்றனர். இதில் 164 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 70 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார்.இதனைதொடர்ந்து திமுக நேரடியாக போட்டியிடப்போகும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதல்வர் முக ஸ்டாலின் தற்போது அறிவித்து வருகின்றார். குறிப்பாக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மீண்டும் சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. கடந்த முறையும் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனைதொர்ந்து அவரின் தொகுதி இம்முறை மாற்றப்படுமா ? என வதந்திகள் கிளம்பி வந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் தான் போட்டியிடுகின்றார் என உறுதியாகியிருக்கின்றது.
இந்நிலையில் 164 தொகுதியில் 11 தொகுதியில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும் 127 வேட்பாளர்கள் பட்டம் பெற்றவர்களாக இருக்கின்றனர். 60 வேட்பாளர்கள் புதுமுகங்கள், தற்போது 164 வேட்பாளர்களையும் நாங்கள் அறிவித்துவிட்டோம். ஆனால் அதிமுக கூட்டணி விரைவில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்கள்? திமுக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லையே என சொன்னார்கள். நாங்கள் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவோம் என கூறினார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
இந்நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் நிலையில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் முக ஸ்டாலின் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுகவில் சமீபத்தில் இணைந்த ஓபிஎஸ் அவர்களுக்கு போடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.அவர் முதல் முறையாக திமுக வேட்பாளராக போட்டியிட இருக்கின்றார்.

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்…யார் இந்த தனபால்?

கடந்தமுறை கரூர் தொகுதியில் போட்டியிட செந்தில் பாலாஜி இம்முறை கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக நியமனம்.மேலும் தவெக தலைவர் விஜய் போட்டியிட இருப்பதாக சொல்லப்படும் பெரம்பூர் தொகுதியில் திமுகவே நேரடியாக களம் காண்கின்றனர்.பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பாக ஆர்.டிசேகர் போட்டியிடுகின்றார்

திமுக தான் தங்களது அரசியல் எதிரி என சொல்லி வருகின்றார் தவெக தலைவர் விஜய். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியில் திமுகவேட்பாளர் களம் காண்கின்றார். எனவே கண்டிப்பாக பெரம்பூர் தொகுதி பரபரப்பான தொகுதிகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் விஜய் தான் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகின்றாரா ? என்பது தெளிவாக தெரியவில்லை. நாளை அவர் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த பிறகு தான் இந்த தகவல் உறுதியா என்பது தெரிய வரும். இந்நிலையில் 164 தொகுதிகளில் முதலமைச்சர் முக ஸ்டாலின் 60 க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கின்றார்.

இது பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது.அதோடு திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்ததை தொடர்ந்து எந்தெந்த தொகுதியில் அதிமுக மற்றும் திமுக நேரடியாக மோதுகின்றனர்.எந்தெந்த தொகுதியில் திமுக மற்றும் தவெகநேரடியாக மோதுகின்றனர் என்றெல்லாம் மக்கள் அலசி ஆராய துவங்கியிருக்கின்றனர். மேலும் சென்னையில் இருக்கும் 16 தொகுதியில் திமுக 15 தொகுதியில் நேரடியாக போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Source link