தோனி இல்லாத சென்னை அணியின் பிளெயிங் லெவன் எப்படி ? அஸ்வின் கணிப்பு

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத் தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத் தில் நடப்பு சாம்பியனான ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2 வாரங்களுக்கு தோனி விளையாடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது. காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு கரணமாக தோனி சிகிச்சை பெற்று வருகிறார். எனவே ஐபிஎல் தொடரில் முதல் 2 வாரங்களுக்கு தோனி விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல் 2 வாரங்கள் தோனி விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே அறிவித்துள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்த நிலையில், தோனி இல்லாத சென்னை அணியின் பிளெயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் கணித்துள்ளார்.

அஸ்வினின் பிளேயிங் லெவன்:

ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், உர்வில் படேல், டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, சர்பராஸ் கான் (அ) ஆயுஷ் மாத்ரே, கார்த்திக் சர்மா, அகீல் ஹொசைன், நூர் அகமது, மாட் ஹென்றி, கலீல் அகமது

இம்பாக்ட் வீரர்கள் அன்ஷுல் கம்போஜ் / ராமகிருஷ்ணா கோஷ் / ராகுல் சாகர் /ஷ்ரேயாஸ் கோபால்.

Source link