விஜய்க்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்வேன் – நடிகை ஜூலி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானவர் ஜூலி. அந்த போராட்டத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்ற அவர், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். நர்ஸாக பணியாற்றியிருந்த ஜூலி, அதே நேரத்தில் சில குறும்படங்களிலும் நடித்திருந்தார்.

அண்மைக்காலமாக ஜூலியின் பெயர் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஜூலி, சமீப காலமாக தவெக கட்சி தலைவர் மற்றும் நடிகர் விஜய் குறித்து தொடர்ந்து விமர்சன வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் பெண்களை அவதூறாக பேசிய பொன்ராஜ்க்கு எதிராக விஜய் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி தனது வீடியோவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் “பெண்களுக்காக நீங்கள் புகார் கொடுக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அப்படி புகார் கொடுக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?” உங்கள் கட்சியில் உள்ள வெர்ச்சுவல் வாரியர்ஸ் பெண்களை எவ்வளவு மோசமாக விமர்சிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? அதை ஏன் தட்டிக் கேட்கவில்லை? நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்று சொல்லுங்கள். அந்த தொகுதியில் நான் நேரடியாக வந்து உங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன். உங்கள் கட்சியினர் பெண்களுக்கு எதிராக செய்கிற விஷயங்களை எல்லாம் மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுவேன்” என்று சவால் விடும் வகையில் ஜூலி பேசியுள்ளார்.

சமீபத்தில் விஜய்யை பார்க்க வந்த ஒரு ரசிகர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தையும் ஜூலி ஏற்கனவே ஒரு வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். அந்த சம்பவம் சமூக வலைதளங்களில் ஏற்கனவே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், ‘ஒரு உயிர் போனதற்கு நீங்கள் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை’ என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.



Source link