கரூர் டூ கோவை தெற்கு.. தொகுதி மாறிய செந்தில் பாலாஜி.. முதல்வர் மு.க. ஸ்டாலினின் மாஸ்டர் பிளான் – 2026 assembly election senthil balaji contest to coimbatore south constituency

திமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த முறை திமுக வேட்பாளர்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் கரூரில் இருந்து செந்தில் பாலாஜி கோவை தொகுதிக்கு மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜி
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பை அதிகரிக்கும் விதமாக திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை தேர்வு செய்வது, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவற்றில் திமுக கவனம் செலுத்தி வந்தது. இந்நிலையில் இன்று கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் திமுக சார்பாக வேட்பாளர்கள் பட்டியல் என அடுத்தடுத்து அறிவிப்பு வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

திமுக வேட்பாளர் பட்டியல்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக இரண்டு கட்டமாக வேட்பாளர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், இன்னும் சில தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. இந்நிலையில் இன்று திமுக சார்பாக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே கட்டமாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
தொகுதி மாறிய செந்தில் பாலாஜி
இந்த பட்டியலில் கரூர் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தொகுதி மாறியுள்ளது அரசியல் களத்தில் பல்வேறு விதமான விவாதங்களை கிளப்பியுள்ளது. கரூர் என்றாலே செந்தில் பாலாஜி எனும் சொல்லும் அளவிற்கு அந்த பகுதியில் செல்வாக்கு மிக்கவராக வலம் வரும் இவர் தற்போது கோவையில் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் கோட்டையாக சொல்லப்படும் கோவையில் செந்தில் பாலாஜி போட்டியிடவுள்ள மு.க. ஸ்டாலின் வகுக்குத்துள்ள முக்கிய வியூகமாக கூறப்படுகிறது.
கோவை தெற்கு தொகுதி
மறுசீரமைப்புக்கு பின்பாக கோவை தெற்கு தொகுதியில் தொடர்ச்சியாக அதிமுக வெற்றி பெற்று வந்தது. கடந்த முறை வானதி சீனிவாசன் இங்கு போட்டியிட்ட நிலையில், அவருக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கமல்ஹாசன் களமிறங்கினார். இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நடந்த நிலையில், மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். இவர் தற்போது தொகுதி மாறி போட்டியிட உள்ளார்.
அரசியல் விமர்சகர்களின் பார்வை
இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார். இந்த முறை கோவை பகுதியில் திமுக அதிகம் கவனம் செலுத்துவதற்காகவே அவர் இங்கு வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பாகவே கோவையில் தேர்தல் சம்பந்தமான வேலைகளை கவனித்து வந்தார் செந்தில் பாலாஜி. இதன் மூலமாக அவர் தொகுதி மாறலாம் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
கோவையில் திமுகவை பலப்படுத்த வியூகம்
இந்நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக கரூரில் இருந்து கோவை மேற்கு தொகுதிக்கு மாறியுள்ளார் செந்தில் பாலாஜி. கோவையில் எஸ்.பி. வேலுமணி வலுவாக உள்ள நிலையில், சமீப காலமாக பாஜகவின் செல்வாக்கும் அந்த பகுதியில் அதிகரித்து வருகிறது. இப்படியான நிலையில் தற்போது திமுகவையும் கோவையில் பலப்படுத்தும் விதமாக செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டுள்ளார்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட அமைச்சர்கள்
மேலும் கோவை தெற்கு தொகுதியில் அவர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அருகில் உள்ள தொகுதிகளிலும் செந்தில் பாலாஜியின் தாக்கம் இருக்குமென திமுக தலைமை நம்புகிறது. இதனிடையில் அதே தொகுதியில் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுன் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் அமைச்சர்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.