திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. மீண்டும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகின்றார். இதைத்தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்படாதது குறித்து பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்
முக்கிய அம்சங்கள்:
நீத்து தேர்வு ரத்து செய்யவில்லை
உதயநிதி ஸ்டாலின் பதில்
இதில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுகின்றார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதி யில் நிற்கின்றார். கடந்த முறையும் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெற்றார். ஆனால் இம்முறை அவர் தொகுதி மாற வாய்ப்பிருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் மீண்டும் அவருக்கு சேப்பாக்கம் தொகுதி தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த முறையை போல இம்முறையும் மகத்தான வெற்றியை பெறுவோம் என தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நீட் தேர்வு இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்ற விமர்சனத்திற்கும் அவர் பதிலளித்திருந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறினார். அவர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திமுகவினரும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறினார்கள். ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படவே இல்லை. கடந்த தேர்தலில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக கூறியது தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது
ஆனால் இன்னும் அவர்கள் சொன்னதை போல நீட் தேர்வை ரத்து செய்யவில்லையே ? என்ற விமர்சனங்கள் திமுக மீது வைக்கப்பட்டு வருகின்றது இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார். அவர் கூறியது, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறினோம். தமிழ்நாட்டிற்கு வந்த ராகுல் காந்தியும் வாக்குறுதி கொடுத்தார். மத்தியில் காங்கிரஸ்ஆட்சிக்கு வந்தால் திமுகவின் வலியுறுத்தலின் பெயரில் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்.
சட்டமன்றத்தில் கூட நீட் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் எடுத்துள்ளோம். மத்தியில் பாஜக ஆட்சி செய்வதால் தான் இந்த நிலைமை. என்ன இருந்தாலும் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக தொடர்ந்து போராடுவோம் என்றார் உதயநிதி ஸ்டாலின். இவ்வாறு நீட் ரத்து செய்யப்படவில்லை என்ற விமர்சனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் திமுகமீது மிகப்பெரிய விமர்சனமாகவே நீட் இருந்து வருகின்றது. வார்த்தைக்கு வார்த்தை நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொல்லிய திமுக அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என சிலர் வருத்தத்தில் இருக்கின்றனர். ஆனால் மத்தியில் பாஜகவின் ஆட்சி தான் நடைபெற்று வருகின்றது. இதுவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து அப்போதும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என்றால் திமுகவை விமர்சிக்கலாம்.
இருந்தாலும் திமுக தரப்பில் இருந்து தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராடி தான் வருகின்றனர் என திமுக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். நீட் தேர்வினால் பலர் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வு பல மாணவர்களின் கனவை தகர்த்து வருகின்றது. எனவே எப்படியாவது அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான் மக்களின் எண்ணமாக இருக்கின்றது.
தேர்தல் களத்துல வேற மாதிரி..ஸ்டாலின் அதிரடி
இந்நிலையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகாவது நீட் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதா ? இல்லை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வரும் வரை நீட் ரத்து செய்யப்பட்டதா ? என்ற ஏக்கத்தில் தமிழக மக்கள் இருக்கின்றனர். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து திமுக முயற்சித்து போராடி தான் வருகின்றனர் என்பது திமுகவினரின் கருத்தாக உள்ளது.
