இப்படியான நிலையில் இன்றைய பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக முதலமைச்சர் வேட்பாளர் நான் தான் என தெரிவித்துள்ளார். அவர் பேசியது என்னவென்றால், தமிழ்நாட்டிற்கான தேர்தல் தான் நடந்து வருகின்றது. சட்டமன்ற தேர்தல் தான் நடக்கின்றது என முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் தான் போட்டி என ஸ்டாலின் சொல்கின்றார். அவருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், எங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும்.
அதிமுக தான் எங்கள் கூட்டணிக்கு தலைமை. எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர். இதை நான் சொல்லவில்லை, கூட்டணியில் இருக்கும் அனைவரும் சொன்னார்கள். எங்கள் கூட்டணி வெற்றிபெற்று அதிமுக தான் ஆட்சியமைக்கும். கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட முதல் நாளே உள்துறை அமைச்சர் நான் தான் முதல்வர் வேட்பாளர் என கூறிவிட்டார் என எடப்பாடி பழனிச்சாமி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நான் தான் முதல்வர் வேட்பாளர், அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனைத்தொடர்ந்து நாங்கள் டெல்லிக்கு போனால் ஸ்டாலினுக்கு ஏன் பயம் வருகின்றது ? என்றும் கேள்வி எழுப்பினார் எடப்பாடி பழனிச்சாமி. ஸ்டாலின் அவர்களுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது, அவர் அதன் காரணமாக தான் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் போட்டி என சொல்லிக்கொண்டு வருகின்றார். மேலும் எங்களை பற்றி விமர்சனம் செய்ய வேறு எதுவும் இல்லை.
அதனால் தான் இப்படியெல்லாம் அவர் பேசிக்கொண்டு இருக்கின்றார் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் குறித்தும் மறைமுகமாக விமர்சித்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதாஅவர்களின் மறைவிற்கு பிறகு காட்சியிலேயே இருந்துகொண்டு தனி அணியை உருவாக்கியவர்கள் எல்லாம் தற்போது திமுகவில் இணைந்திருக்கின்றனர்.
அதிமுகவில் பி டீம் உருவாக்க நினைத்தார்கள். அதனால் கட்சியில் எவ்வளவு பிரச்சனைகள் எழுந்தது. அத்தனை பிரச்சனைகளையும் சரி செய்து அதிமுக கட்சியை மீண்டும் நிலைநிறுத்தினோம். தற்போது அவர்கள் எல்லாம் திமுகவில் தான் இணைந்திருக்கின்றனர் என ஓபிஎஸ் ஐ மறைமுகமாக விமர்சித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்…யார் இந்த தனபால்?
இந்நிலையில் திமுகவினர் தொடர்ந்து கூட்டணி தலைமை குறித்து விமர்சனம் செய்து வந்த நிலையினுள் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை, எடப்பாடி பழனிசாமியாகிய நான் தான் முதல்வர் வேட்பாளர். தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் ஆட்சியமையும் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
