Tvk Vijay Kolathur Campaign,முதல்வர் முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்ய அனுமதி – tvk leader vijay got permission for kolathur campaign on march 31

தவெக தலைவர் விஜய் இன்று பெரம்பூரில் பரப்புரை செய்ய இருந்தார். ஆனால் திடீரென நேற்று அவர் பெரம்பூரில் பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியான விஜய் நேரடியாக தேர்தல் அதிகாரியிடம் சென்று புகார் மனு கொடுத்தார். இதனைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய்க்கு கொளத்தூர் தொகுதியில் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் விஜய் இந்த தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருக்கின்றார்

இந்நிலையில் தவெக தங்களது முதல் தேர்தலை தனித்து போட்டியிடுகின்றனர். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனியே போட்டியிடுகின்றனர் தவெகவினர். காங்கிரஸ், தேசிய ஜனநாயக கூட்டணி, ராமதாஸ் -சசிகலா கூட்டணி என பல கட்சிகளுடன் தவெக கூட்டணி அமைக்கலாம் என பேசப்பட்ட நிலையில் அது எதுவும் நடக்கவில்லை.

இதையடுத்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்க இருந்தார் தலைவர் விஜய். ஆனால் வேட்பாளர்கள் அறிவிப்பும் தள்ளி போனது. நாளை தவெக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய்பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என தெரிகின்றது. அதன் காரணமாக தான் அந்த தொகுதியில் அவர் தனது முதல் பரப்புரையை துவங்க இருந்தார் என்றும் சொல்லப்பட்டது.

இருப்பினும் பெரம்பூர் தொகுதியில் விஜய் பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது கொளத்தூர் தொகுதியில் பரப்புரை செய்ய அனுமதி கிடைத்திருக்கின்றது. அதுவும் முதல்வர் களமிறங்கும் கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் தனது பரப்புரையை செய்ய இருக்கின்றார். கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது.

அங்கு விஜய் பரப்புரை செய்ய இருப்பது கவனத்தை ஈர்க்கிறது. கொளத்தூர் பரப்புரையில் விஜய் என்னவெல்லாம் பேச போகின்றார். அதுவும் முதல்வர் தொகுதியில் அவரை எதிர்த்து என்ன பேசப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு எழுகின்றது. என்ன இருந்தாலும் கண்டிப்பாக அந்த பரப்புரையில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் உறுதியாக தெரிகின்றது.

மேலும் விஜய் இதுவரை களத்தில் நேரடியாக இறங்கவில்லை, மக்களை சந்தித்து பேசுவதிலை என்ற குற்றசாட்டு இருந்து வந்தது. ஆனால் தவெகவினர் சொல்லும்போது, விஜய் மக்களை சந்திக்கவே விரும்புகின்றார். ஆனால் தவெகதலைவரை மக்களை சந்திக்கவிடாமல் சதி செய்கின்றனர் என்கின்றனர்.

இதையெல்லாம் தாண்டி நாளை மறுநாள் விஜய் கொளத்தூரில் பரப்புரை செய்ய இருக்கின்றார்.அதற்கு முன்பாக தவெக வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளார்.இன்னும் தேர்தலுக்கு குறுகிய நாட்களே இருப்பதால் தவெக தலைவர் விஜய் தேர்தல் பணிகளில் வேகமெடுத்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் தவெக கட்சி குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெறுவார்கள் என கணிப்புகள் வருகின்றன.

கண்டிப்பாக திமுகமற்றும் அதிமுகவிற்கு கடும் போட்டியாக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. மேலும் திமுகவின் வாக்குகளை தவெக பிரிப்பார்கள் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இவ்வாறு தமிழக வெற்றிக்கழகம் கட்சி தங்களது முதல் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என சொல்லப்படும் நிலையில் அந்த கணிப்பு உண்மையாகுமா என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Source link