பெங்களூரு,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத் தில் இன்றிரவு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஐதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் அந்த அணியில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதமடித்து அசத்தினார். இஷான் கிஷன் 38 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த அனிகேத் சர்மா சிறப்பாக விளையாடி 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணியில் ஜேக்கப் டபி , ஷெப்பர்ட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
