திருச்சியில் கோடைகால விமான சேவை அதிகரிப்பு

திருச்சி,

விமான சேவை விவரங்கள்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதி வரை இயக்கப்படும் விமான சேவை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குளிர் கால இயக்கத் தில் 21 விமான சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கோடை கால இயக்கத்தில் அந்த விமான சேவைகள் 27 விமான சேவைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச இயக்க தினசரி விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய வான் வழிகள் விரிவாக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர் வான் வழியில் ரத்து செய்யப்பட்ட சேவைகள் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை கோடை கால பட்டியலில் கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவை வழங்கப்பட்டுள்ளது.

குளிர்கால சேவைகளை போல துபாய்க்கும் தினசரி விமான சேவைகள் தொடர்கிறது. அதேபோன்று அபுதாபிக்கு குறைவாக இருந்த விமான சேவைகள் தற்போது செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வழங்கப் பட உள்ளது. மேலும் ஏற்கனவே இருந்த சேவைகள் அனைத்தும் தொடர்கிறது. கோலாலம்பூருக்கு குளிர் காலத்தில் பாதிக்கப்பட்ட விமான சேவைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு மீண்டும் வழங்கப்பட உள்ளது. யாழ்பாணத்திற்கு குளிர்காலத்தில் வழங்கப்பட்ட சேவையே தொடர்கிறது. சார்ஜா வழித்தடம் ஏற்கனவே இருந்ததை போல தொடரும். ஒரே நாளில் இந்த வான் வழியில் கூடுதல் விமான சேவைகள் வழங்கப்பட உள்ளது. மஸ்கட் வழித்தடத்தில் செவ்வாய், வியாழக்கிழமை கூடுதல் சேவைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமான சேவைகளில் கோடை காலத்தில் 18 சேவைகளாக இருந்த விமான சேவைகள் தற்போது 19 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரு -திருச்சி வழித்தடத்தில் தினசரி விமான சேவை மற்றும் கூடுதல் விமான சேவை.

சென்னை-திருச்சி வழித்தடத்தில் தினசரி விமான சேவை. திருச்சி – ஐதராபாத் இடையே தினசரி விமான சேவை, மும்பை- திருச்சி இடையே செவ்வாய், வியாழன், சனி கிழமைகளில் விமான சேவை, டெல்லி-திருச்சி இடையே திங்கட்கிழமை, புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவை வழங்கப்படுகிறது. திருச்சி -திருவனந்தபுரம் சேவை நிறுத்தப்படுகிறது. இந்த சேவைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த தகவலை விமான நிலைய இயக்குனர் ராஜு தெரிவித்துள்ளார்.

Source link