மேற்கு வங்காளத்தை அழிக்க முயல்கிறது பாஜக: மம்தா பானர்ஜி தாக்கு

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 23, 29 ஆகிய தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கில் மம்தா பானர்ஜி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேநேரத்தில் எதிர்கட்சியான பாஜக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில், ராணிகஞ்ச்- பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மம்தா பானர்ஜி கூறியதாவது:

அப்போது அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் புல்டோசர்களை பயன்படுத்தி அனைவரையும் வெளியேற்றிவிடும். மேற்கு வங்கத்துக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்யவும் பாஜக திட்டமிட்டு வருகிறது. நமது மாநிலத்தை அழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் பாஜக மத்தியில் ஆட்சியை இழப்பது உறுதி. சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்து 4-வது முறையாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியமைத்தபின் பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி மத்தியில் பாஜகவை அகற்றி டெல்லியைக் கைப்பற்றுவதே இலக்கு. வாக்காளர் பட்டியல் முறையாக வெளியிடப்படாதபோது அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.

Source link