பழனி தொகுதியை விட்டுக் கொடுத்தது ஏன்? எல்.முருகனை முற்றுகையிட்டு பாஜகவினர் வாக்குவாதம்

பழனி,

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதில் அதிமுக சார்பில் பழனி வேட்பாளராக ரவி மனோகர் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் பழனி சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பழனி தொகுதியில் ரவி மனோகர் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். 2026 தேர்தலில் எப்படியாவது பழனி தொகுதியை அதிமுகவிடம் வாங்கிவிட வேண்டும் என்ற முடிவில் பாஜகவினர் இருந்தனர். ஆனால் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிக்காக இன்று பழனி வந்த மத்திய மந்திரி எல். முருகனை பாஜகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட பழனி தொகுதியை பாஜகவிற்கு பெற்றுத் தரக் கோரி பாஜக தொண்டர்கள் கோஷமிட்டனர். மேலும் பழனி தொகுதியை பெற்று தராவிட்டால் கட்சியில் இருந்து அனைவரும் விலகி விடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Source link