Edappadi Palanisamy About Krishnasamy,வாக்கு வங்கியின் அடிப்படையில் தான் சீட் கொடுக்கப்படும்..புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமிக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் – edappadi palanisamy clarification about why krishnasamy left admk alliance

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுகின்றார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் கொடுத்திருக்கின்றார்

முக்கிய அம்சங்கள்:

கிருஷ்ணசாமி குற்றசாட்டு

எடப்பாடி பழனிச்சாமி பதில்

edappadi palanisamy about krishnasamy
சட்டமன்ற தேர்தல் 2026 ஐ முன்னிட்டு அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி இடம்பிடித்தது. இதனைத்தொடர்ந்து அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை துவங்கினார்கள். கிட்டத்தட்ட அதிமுக கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீட்டில் முழு நிறைவு ஏற்பட்டதாகவே தெரிகின்றது.பாஜக, அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் திருப்தியடைந்ததாக தெரிகின்றது. ஆனால் புரட்சி பாரதம் கட்சி, புதிய தமிழகம் கட்சி போன்ற கட்சியினர் தங்களுக்கு எதிர்பார்த்த எண்ணிக்கைகளில் தொகுதிகளை வழங்கவில்லை என கூறினார்கள். ஆனாலும் புதிய பாரதம் கட்சியிடம் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கூட்டணியில் தொடர வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
இருப்பினும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்படவில்லை. இதன் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துவிட்டார் கிருஷ்ணசாமி. அதோடு மட்டுமல்லாமல் அதிமுக மீது அடுக்கடுக்காக விமர்சனங்களை முன் வைத்தார். குறிப்பாக அதிமுக எங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதை போல பேசினார் கிருஷ்ணசாமி.
இதனைத்தொடர்ந்து இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் கொடுத்திருக்கின்றார். கிருஷ்ணசாமியின் குற்றச்சாட்டு குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அவர் நேரடியாக எங்களிடம் பேசுவார்த்தை நடத்தவில்லை. நான் சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லக்கூடாது என நினைக்கின்றேன். ஆனால் கிருஷ்ணசாமி என்னை சொல்ல வைக்கின்றார். அதனால் சொல்கின்றேன்..எங்களிடம் கிருஷ்ணசாமி பத்து தொகுதிகளை கேட்டார். அதற்கு முடியாது என்றோம்.
பிறகு ஐந்து தொகுதிகள் கேட்டார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இத்தனைக்கும் அவர் எங்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை செய்யவில்லை. கட்சியை சேர்ந்தவர்களை வைத்து தான் கிருஷ்ணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த முறை கூட அவர் எங்களுடன் கூட்டணி வைக்கவில்லை. இம்முறை வேறு ஒரு ஆட்களின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். நாங்கள் அவர் கேட்ட தொகுதிகளை கொடுக்க இயலாது என சொல்லிவிட்டோம்.
வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால், ஒவ்வொரு கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் அவர்களின் வாக்கு வங்கியை பொறுத்தே தான் தொகுதிகள் ஒதுக்கப்படும். குறிப்பிட்ட கட்சி பெறுகின்ற வாக்குகளை வைத்து தான் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. அதிமுக கூட்டணியில் மட்டுமல்ல திமுக கூட்டணி மேலும் வேறெந்த கூட்டணியாக இருந்தாலும் வாக்கு வங்கியை பொறுத்து தான் தொகுதிகள் பிரிக்கப்படுகின்றன.
புதிய தமிழகம் கட்சி 33 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகளை தான் வாங்கியிருக்கின்றனர். பிறகு எப்படி அவர் கேட்கின்ற தொகுதிகளை வழங்க முடியும் ? எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பெட்ரா வாக்குகளின் அடிப்படையில் தான் சீட் வழங்கியிருக்கின்றோம். அதனால் தான் அவர் கேட்கப்பட்ட தொகுதிகளை எங்களால் வழங்க இயலவில்லை என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுவதால் எந்தளவிற்கு தாக்கத்தை உண்டாக்க முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் அதிமுக கூட்டணியில் இருந்தால் கண்டிப்பாக அக்கூட்டணிக்கு பலமாக தான் இருந்திருக்கும் என சொல்லப்படுகின்றது.

ஒன்றுபட்ட அதிமுக- எடப்பாடி பழனிசாமி என்ன நினைக்கிறார்? ராம சீதாபதி பேட்டி!

ஒருவேளை புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் கூட்டணிக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் அதே சமயம் புதிய தமிழகம் கட்சிக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பது தான் பொதுவான கருத்தாக இருந்து வருகின்றது. பெரும்பாலானோர் புதிய தமிழகம் கட்சி வெளியேறி இருந்திருக்க கூடாது, அதிமுக கூட்டணியில் தான் தொடர்ந்திருக்க வேண்டும் என சொல்கின்றனர்